சுயநலத்துக்காக விளையாடினார் மித்தாலி! பயிற்சியாளர் ரமேஷ் பவார் குற்றச்சாட்டு!

Published:

mithaliraj - 2026

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை மித்தாலி ராஜ், சுயநலத்துடன் விளையாடுவதாக பயிற்சியாளர் ரமேஷ் பவார் குற்றம்சாட்டியுள்ளார்.

20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் அரை இறுதியில் மித்தாலி ராஜ் நீக்கப்பட்டது சர்ச்சையானது.

இதுகுறித்து பிசிசிஐக்கு, பயிற்சியாளர் ரமேஷ் பவார் அளித்த விளக்கத்தில், அணிக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததால் தான் மித்தாலி நீக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். ரமேஷ் பவார் தன் மீது கூறிய புகார்களால் மிகுந்த வேதனையுற்று இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் மித்தாலி ராஜ் பதிவிட்டுள்ளார்.

தன்னுடைய தேசப்பற்று தற்போது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நாள் தனது வாழ்நாளின் கருப்பு நாள் எனவும் மித்தாலி ராஜ் வேதனை தெரிவித்துள்ளார்!

Related articles

Recent articles

spot_img