
ஒலிம்பிக் போட்டிகளில்
சாதனையைத் தவறவிட்ட சிலர்(3)
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
பி.டி. உஷா தகுதிப் போட்டியில் ஓடி, ஜூடி பிரவுனை மீண்டும் வென்றார். இறுதிப் போட்டி வந்தது, பி.டி. உஷா பாதை ஐந்திலிருந்து ஓட வேண்டும். ஒரு தவறான தொடக்கம் காரணமாக அனைத்து போட்டியாளர்களும் திரும்பி வந்தனர். இது பி.டி. உஷா பின்னர் தனக்கு கவனச் சிதறல் ஏற்பட்டதன் காரணமாகக் கூறைனார். நவல் மௌதவாகல் மற்றும் ஜூடி பிரவுன் முறையே தங்கம் மற்றும் வெள்ளி பெற்றனர். மேலும் மூன்றாவது இடத்திற்கு போராட கிறிஸ்டியானா கோஜோகாரு மற்றும் பி.டி. உஷா ஆகியோர் ஓடினர். ஃபோட்டோ ஃபினிஷ் கேமராவில் கிடைத்த முடிவு கோஜகாரு வென்றதாகக் கூறியது. நேர வித்தியாசம் 0.01 விநாடி. தேசமே அழுத நாள் அது.
மில்கா சிங் அவருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. காமன்வெல்த் விளையாட்டு தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் அவர். அவருக்கு பறக்கும் சீக்கியர் என்ற பட்டப்பெயர் உண்டு. இருப்பினும், 1960 ரோம் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அவர் ஏறத்தாழ் ஒருபதக்கம் பெற்றுவிட்டர். இந்தப் போட்டியில் மில்கா தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப் பட்டது.
ஓடிஸ் டேவிஸைத் தவிர, மில்கா சிங் மற்ற அனைத்து போட்டியாளர்களையும் ஹீட்ஸில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றார். இறுதிப் போட்டிக்கு முன்னர் அவர் மெதுவாகச் சென்று மற்ற பந்தய வீரர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தார். இது அவருக்கு கவனச் சிதறலை ஏற்படுத்தியது. ஓடிஸ் டேவிஸ் மற்றும் கார்ல் காஃப்மேன் முதல் மற்றும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினர், அவர்கள் 44.9 வினாடிகளில் சாதனையை முறியடித்தனர்.
அவர்களுக்குப் பின்னால் மால்கம் ஸ்பென்ஸ் மற்றும் மில்கா சிங் இருவரும் 45.9 என்ற நேரத்துடன் உலக சாதனையை முறியடித்தனர். இருப்பினும், இறுதியில் செய்யப்பட்ட புகைப்பட கருவி உலக சாதனையை முறியடித்த போதிலும் சிங் நான்காவது இடத்தில் வந்ததாகக் கூறியது.
இந்திய கால்பந்து அணி 1956 ஒலிம்பிக்கில் இந்திய கால்பந்து அணி வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டது. 1950கள் மற்றும் 60களில், கால்பந்து ஆட்டத்தில் இந்தியா திறமையான அணியாக இருந்தது. உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற இந்திய அணியின் புகழ்பெற்ற கதை உண்டு.
உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற பின்னர் காலணிகள் அணிந்து இந்திய அணி ஆட மறுத்துவிட்டதை இன்றும் உலக அளவில் பேசுவார்கள். ஆனால் 1956இல் மெபர்ன் ஒலிம்பிக்கில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டது. 4-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வென்று இந்தியா யூகோஸ்லாவியாவுக்கு எதிராக அரையிறுதிக்கு முன்னேறியது.
துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் 1-0 என முன்னிலை வகித்த போதிலும் 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர். பல்கேரியாவுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் வெண்கலப் பதக்கம் வெல்ல இன்னும் ஒரு வாய்ப்பு இருந்தது, ஆனால் மீண்டும் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
2012ஆம் ஒலிம்பிக்கில் ஜாய்தீப் கர்மாகர் ஒரு புள்ளி வித்தியாசத்தில் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டார். 2004ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் அஞ்சு பாபி ஜ்யார்ஜ் நீளம் தாண்டுதலில் 23 செ.மீ வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டார்.
லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி இணை 2004 ஒலிம்பிக்கில் மிகத் திறமையாக விளையாடி அரையிறுதி வரை வந்தனர். தொடக்கத்தில் ஆண்டி ரோடிக் இணையையும் ரோஜர் ஃபெடரர் ஜோடியையும் வென்றிருந்தனர். ஆனால் அரையிறுதி ஆட்டத்திலும், வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்திலும் தொல்வியுற்று பதக்க வாய்ப்பை இழந்தனர்.
அதே 2004 ஒலிம்பிக்கில் குஞ்சுராணி தேவி பளுதூக்குதல் போட்டியில் பத்து புள்ளிகள் வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை இழந்தார். இன்னும் பல கதைகள் உள்ளன. 2016 ஒலிம்பிக்கில் ரோஹன் போபண்ணா, சானியா மிர்சா ஜோடி பதக்க வாய்ப்பை இழந்தனர்.
இந்த ஒலிம்பிக்கில் இதுவரை பி.வி. சிந்து, மேரி கோம் ஆகியோர் இன்னமும் பதக்கம் பெறும் வாய்ப்பு உள்ளவர்கள். வெல்வார்களா?