தமிழகத்தில் தாமிர ஆலையே வேண்டாமென தீர்மானம் நிறைவேற்ற தினகரன் கோரிக்கை

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்
ttv dinakaran - 2026

தமிழகத்தில் தாமிர ஆலைகளே வேண்டாம் என்ற கொள்கை முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார் .

 இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அரசு முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார் டிடிவி தினகரன் .

ஆலையை திறக்கும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று அவர் வேதனை தெரிவித்தார்.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக, தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி கொள்கை சார்ந்த முடிவெடுக்க வேண்டும்  என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன்  கோரியுள்ளார்.

முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் ஆலையை திறக்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.