போதையில் வைத்தியம் பார்த்த அரசு டாக்டர்; பணி நீக்கம் செய்ய மக்கள் வலியுறுத்தல்!

Published:

doctor kulithalai - 2026

குளித்தலை அரசு மருத்துவமனை டாக்டர் 14/12/2018 இரவு மது அருந்திவிட்டு மருத்துவமனை வந்தது மட்டும் அல்லாமல், அவசர சிகிச்சை பிரிவில் உள்ள ஒரு நபருக்கும் சிகிச்சை செய்துள்ளார்.

எனவே அவரை உடனடியாக நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் மருத்துவர் பணியின் போது குடித்து விட்டு பணிக்கு வந்துள்ளார் என்றும் போதையில் பணி செய்துள்ளார் என்றும் குற்றம் சாட்டுகின்றார்கள்.

போதையில் நோயாளி ஒருவருக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர்

குளித்தலை அரசு மருத்துவமனை
நேயாளிகளின் உயிருக்கு  அச்சுறுத்தல்  ஏற்பட்டுள்ளதாகக் கூறும் மக்கள்  இந்த மருத்துவர் உயிரை காப்பவரா ??? மக்கள் உயிர் உங்களுக்கு
விளையாட்டு பொருளா ??? என்று கேள்வி எழுப்புகின்றனர்

கரூர் மாவட்ட நிர்வாகம்,  தமிழக அரசு , இந்திய மருத்துவ கவுன்சில்  இவர் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கா விட்டால் மக்களை திரட்டி மிக பெரிய போராட்டம் மருத்துவமனை முன்பு நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img