உதயநிதியை சந்தித்த எஸ்.வி.சேகர்: திமுக.,வில் இணைந்ததாக கிளம்பிய பரபரப்பு!

சற்றுமுன் சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
svesekhar-udayanidhi-stalin
svesekhar-udayanidhi-stalin

இன்று சமூக ஊடகங்களில் பாஜக., பிரமுகரும், நடிகருமான எஸ்வி சேகர், திமுக., இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வணக்கம் தெரிவிப்பது போன்ற புகைப்படம் வெளியானது கூடவே எஸ் வி சேகர் திமுகவில் இணைந்து விட்டார் மேலும்,  உதயநிதி நடிக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் சிலரால் பரப்பப்பட்டது இது இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது 

முன்னதாக, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற குழுவுடன் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினையும் எஸ்.வி.சேகர் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

இது குறித்து எஸ்வி சேகர் விளக்கம் அளித்த போது, “அண்மையில் 2020-22-ஆம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடந்தது. அதில், தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றார். இந்தக் குழுவுக்கு ஓர் ஆலோசகர்போல் நான் செயல்பட்டேன். அந்த அணி வெற்றி பெற்றதும் முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை முரளி உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் சந்திக்கச் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன்… அவ்வளவுதான்” என்றார். 

மேலும், “இன்று அவரது பிறந்தநாள் என்று தெரிந்ததால், அவருக்கு வாழ்த்துகளைச் சொன்னோம். அவருடன் நான் ஒரு படமும் நடிக்கிறேன். அந்த வகையில் படத்தின் ஹீரோவுக்கு ஒரு வாழ்த்து சொல்லி வந்தேன். அவ்வளவுதான்.” என்றார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.