spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம்: எஸ்.வி.சேகர் செய்த தவறு; மன்னிப்பால் சரியாகுமா?

பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம்: எஸ்.வி.சேகர் செய்த தவறு; மன்னிப்பால் சரியாகுமா?

- Advertisement -

நகைச்சுவை நடிகராக இருந்து, சமூக நோக்கில் நாடகங்கள் எழுதி நடித்து, அரசியலில் புகுந்து எம்.எல்.ஏ., ஆகி பல துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட எஸ்.வி.சேகர் இப்போது ஒட்டு மொத்த ஊடகப் பணியாளர்களின் வெறுப்பையும் கண்டனங்களையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். மேலும், அவர் மீது பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களும் காவல் துறையில் புகார் மனுக்களை அளித்துள்ளன.

இந்த அளவுக்கு நிலைமை மோசம் அடைய எஸ்.வி.சேகர் அப்படி என்ன செய்தார்? இதன் பின்னணி என்ன?

இரு தினங்களுக்கு முன் பெண் நிருபர் ஒருவர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நிகழ்வு முடிவடைந்த நிலையில் தொடர்ந்து கேள்வி கேட்டார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு எழுந்துவிட்ட ஆளுநர், மேற்கொண்டு கேள்விக்குப் பதில் சொல்ல இயலாத நிலையில், அந்தப் பெண்ணின் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டுச் சென்றார். ஆளுநரின் இந்தச் செயல் தனக்கு அருவறுப்பாக இருந்ததாகவும், இதனால் வீட்டுக்குச் சென்று பலமுறை தனது முகத்தை தண்ணீரால் கழுவியதாகவும் அந்தப் பெண் டிவிட்டரில் பதிவிட்டார். தொடர்ந்து அரசியல் ரீதியான பிரச்னையாக உருவெடுத்தது.

ஆளுநர் குறித்த அரசியல் போராட்டங்களை நடத்தி வரும் எதிர்க்கட்சியினர் இதனைத் தம் தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்பப் போட்டு, ஆளுநர் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர். ஆளுநரும் தம் மன்னிப்பை அந்தப் பெண்ணுக்கு தெரிவித்தார்.

இருப்பினும் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. ‘ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்’ என்ற கோரிக்கை தமிழக அரசியல் கட்சிகளிடையே எழத் தொடங்கிய நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை பார்வர்ட் செய்தார். ஒட்டுமொத்தமாக பெண் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, உயர் பதவிகளில் உள்ள ஆண் பத்திரிகையாளர்களையும் அவதூறாகச் சொல்லும் வகையில் ஒருவர் எழுதிய பேஸ்புக் கருத்தை, அப்படியே பார்வர்ட் செய்தார் எஸ்.வி.சேகர்.

அந்தக் கருத்து, எஸ்.வி.சேகர் எழுதிய கருத்தில்லை என்றாலும், அவர் விரும்பிப் படித்து, அதை தான் ஏற்றுக் கொண்டது போல் தெரியும் வகையில், அப்படியே பார்வர்ட் செய்யப் பட்டது. இந்தக் கருத்தில் தனக்கு உடன்பாடில்லை என்றாலோ, ஊடகத்தினர் குறித்து இப்படியும் கருத்துகள் வெளிவருகின்றன என்று தன் மனத்தாங்கலை வெளிப்படுத்தும் வகையில் இருந்திருந்தால் சிறு குறிப்பு எழுதியோ அதை பார்வர்ட் செய்ய்யாமல், அதன் அதே வடிவத்தில் பார்வர்ட் செய்தது, அவரது பேஸ்புக் பக்கத்தைப் படிப்பவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு எம்.எல்.ஏ.,வாக இருந்தவர், பெண்கள் குழு வைத்துக் கொண்டு தன் நாடக கம்பெனியில் நடிக்க வாய்ப்பு கொடுத்து வருபவர், பத்திரிகையாளர்களுடன் நெருங்கிய பழக்கம் கொண்டிருந்தவர், பாஜக., சார்பில் ஊடகங்கள் யாரிடமாவது கருத்து கேட்க வேண்டும் என்று நினைக்கும் போது, உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்து கேட்கும் அளவுக்கு இருப்பவர், எப்படி இது போன்ற தரக்குறைவான வார்த்தைகளால் கருத்துப்பதிவு செய்தார் என்று பத்திரிகையாளர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

இந்நிலையில், தனது கருத்து குறித்து அதிருப்தியை ஒருவர் வெளியிட்டதும், அந்தக் கருத்தில் உள்ள விபரீதத்தை உணர்ந்து கொண்டு அதனை உடனே நீக்கியிருக்கிறார் எஸ்.வி.சேகர்.

ஆனால், அது வெவ்வேறு வகையில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப் பட்டு, இணைய வெளியில் உலா வந்தது. எஸ்.வி.சேகரே எழுதியது போல் போட்டோஷாப் செய்யப்பட்டும் அது பரவியது. இந்நிலையில், எஸ்வி.சேகரின் கருத்துக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் பலவும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

பல்வேறு சங்கங்கள் தங்கள் கண்டனங்களை அறிக்கைகளாக வெளியிட்டன. சில இடங்களில் காவல் துறையில், அவரது கருத்து குறித்து புகார் பதிவு செய்யப் பட்டது. பெண் பத்திரிகையாளர்கள் குறித்து கேவலமாக ட்விட்டரில் பதிவிட்ட காமெடி நடிகர் எஸ் வி சேகரை பெண்கள் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, அமைச்சர் ஜெயக்குமார், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோர் இதற்கு கண்டனம் தெரிவித்தார். எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா ஆகியோர் மீது அரசே வழக்கு பதிவு செய்யும் என்றார் ஜெயக்குமார்.

உண்மையில் அவர் பதிவு செய்த கருத்து என்ன? அதன் விபரீதம் உணர்ந்து, எஸ்.வி.சேகர் அந்தக் கருத்தை நீக்கியதும், தனது தரப்பு விளக்கமாக அளித்து, மன்னிப்பும் கோரி தெரிவித்த வார்த்தைகள் என்ன…?

மதுரை யுனிவர்சிடியும் கவர்னரும் பின்னே கன்னிப் பெண்ணின் கன்னமும் – என்ற தலைப்பிட்டு, திருமலை சா என்பவர் எழுதிய பதிவினைத்தான் எஸ்.வி.சேகர் தாம் படித்துப் பார்க்காமலேயே பார்வர் செய்ததாகக் கூறியுள்ளார். எஸ்.வி.சேகரின் அந்தப் பதிவு…


தொடர்ந்து, பல்வேறு மட்டங்களிலும் இருந்து சென்ற புகார்களின் அடிப்படையில், வெளி நாட்டில் இருந்து கொண்டு பதிவுகளை எழுதி வரும் குறிப்பிட்ட திருமலை.ச என்பவரது பேஸ்புக் கணக்கும் முடக்கப் பட்டது. இருப்பினும், அவர் முன்னதாக பதிவு செய்திருந்த அந்தக் கருத்து, இணையவெளியில் உலா வந்து கொண்டிருக்கிறது. அந்தப் பதிவில் ஊடகத்தில் இருக்கும் பெரும்பாலான பெண்கள், வக்கிரம் பிடித்த ஆண்களின் பாலியல் சீண்டலுக்கு ஆளாகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இருந்தாலும், சர்ச்சைகள் இப்படி உருவெடுக்க அப்படி என்னதான் எழுதியிருந்தார் திருமலை.சா? அவர் என்ன விதமான தாக்குதல்களை பத்திரிகையாள சமூகம் மீது தொடுத்திருந்தார். அவர் பார்வையில் அதை ஏன் தொடுத்தார்.? ஆளுநர் குறித்த பிரச்னைக்கும் இந்தக் கருத்துக்கும் என்ன சம்பந்தம்..? பார்ப்போம்…

Thirumalai Sa பதிவில் இருந்து…

** மதுரை யுனிவர்சிடியும், கவர்னரும் பின்னே கன்னிப் பெண்ணின் கன்னமும்

பொதுவாக உலகம் முழுவதுமே பல்கலைக்கழகங்களில் மிக அதிகமாக செக்ஸுவர் அப்யூஸ்மெண்ட், ஹராஸ்மெண்ட்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. கூகுளில் போய் செக்ஸுவல் அப்யூஸஸ் இன் அமெரிக்கன் யுனிவர்சிடிஸ் என்று தேடிப் பாருங்கள். அதிக அளவிலான ரேப் நடக்கும் பல்கலைக் கழகங்களின் தர வரிசை உட்பட ஆயிரக்கணக்கான சம்பவங்கள் தெரிய வரும்.

யுனிவர்சிடி ஆஃப் கலிஃபோர்னியா பெர்க்லி யுனிவர்சிடி கேம்ப்பஸில் மிக அதிக அளவு செக்ஸ் புகார்கள் சுமத்தப்பட்ட ஆசிரியர் தமிழ்த் துறை தலைவர் என்பதில் நாம் அனைவரும் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

சாண்ட்டாக்ரூஸ் கேம்ப்பஸில் தமிழ்ப் பாடமே இல்லாத போதிலும் தமிழ் ஆசிரியர் ஒருவர் மீதே அதிக கம்ப்ளெய்ண்ட்கள் வந்துள்ளன. தமிழக பல்கலைக் கழகங்களும் இதற்கு விலக்கல்ல. அமெரிக்காவிலாவது ஏதாவது ஒரு விதத்தில் இதற்கு பரிகாரம் கிடைக்கலாம் தமிழகத்தில் அதுவும் கிடையாது

தமிழகப் பல்கலைக் கழகங்களில் திராவிட இயக்க ஆட்சிகள் வந்த பின்னர் தமிழ் ஆசிரியர்களையும் தங்கள் கட்சி அபிமானிகளையும் பெரும்பாலும் வி.சி.யாக நியமிக்கும் வழக்கம் தோன்றியது.

அதன் பிறகு அது பரிணாம வளர்ச்சி அடைந்து நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல சொந்தக்காரர்கள், தகுதியில்லாதவர்கள், ப்யூன்கள் எடுபிடிகள் மாவட்டச் செயலாளர்கள் என்று அனைத்து விதமான பொறுக்கிகளுக்கும் இந்தப் பதவிகள் வழங்கப் பட்டு அதன் பின்னர் 6 கோடி முதல் 50 கோடிகள் வரை ஏலத்து விடப் பட்டு அளிக்கப் பட்டு வந்தன. இப்பொழுது குற்றசாட்டுக்கு உள்ளாகியிருக்கும் மதுரைப் பல்கலைக் கழகத்தில் இது கழக ஆட்சியின் துவக்கத்தில் இருந்தே தொடர்ந்து நடப்பதுதான்.

வெளியே அவ்வளவாகத் தெரிவதில்லை, அதன் முதல் வைஸ் சான்ஸ்லரான மு.வ மீதே ஏராளமான கதைகள் உண்டு. ஆக இதற்கு அச்சாரம் போட்டவர்கள் திமுகவும் அதன் அபிமான விசிகளுமே. படிக்கும் இடத்திற்கு கழகம் என்று பெயர் வைத்தால் அது வெளங்குமா இப்படித்தான் ஆகி விட்டது.

நிர்மலாதேவி விவகாரம் முதலும் அல்ல கடைசியாக இருக்கப் போவதும் கிடையாது. அங்கு இது வரை வேலை பார்த்த பல்வேறு ஆசிரியர்கள் மீதும் விசிக்கள் மீதும் படிக்க வந்த மாணவிகளை படுக்கைக்கு அழைத்த புகார்கள் ஏராளமாக உள்ளன. ஒரு விசி கெஸ்ட் ஹவுஸை தனது அந்தப்புரமாக பயன் படுத்தியும் வந்திருக்கிறார் அவரும் திமுக அப்பாயிண்ட்டிதான். ஜெயலலிதா நியமித்த நெடுஞ்செழியனின் சம்பந்தி பின்னர் அவரது மகள் இருவர் மீதுமே செக்ஸ் புகார்கள் எழுந்தன. இதுதான் அந்தப் பல்கலைக் கழகத்தின் பாரம்பரியமே.

மதுரையில் பலகாரக் கடை நடத்தும் தி.க.காரர் கிறிஸ்துவர் ஒருவரது மாப்பிள்ளை மதுரை பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையில் இடம் மாறி வேலைக்கு வந்த பொழுது அங்கு ஆராய்ச்சி மாணவியாக இருந்த ஒரு பெண்ணை படுக்கைக்கு அழைக்க அவர் புகார் செய்ய அவர் உடனே நான் திக என்பதினால் ஒரு பாப்பாத்தி என் மீது வீண் புகார் செய்கிறார் என்று வழக்கமான திராவிடக் கழக ப்ளேட்டை போட்டு அந்த மாணவியை அசிங்கப் படுத்தினார்.

அப்பொழுது இதே கருணாநிதியும் அவனது உதவாக்கரைப் பையனும்தான் ஆட்சியில் இருந்தார்கள். இதைப் போலவே சம்பந்தி கோட்டா வி.சி. இன்னொரு ஆராய்ச்சி மாணவியை தன்னுடன் ஊட்டிக்கு ஜாலி ட்ரிப்பாக வருமாறு அழைத்த விஷயம் குமுதம் வரை வந்து நாறடிக்கப் பட்டது.

பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்ப்பதும் படுக்கைக்கு அழைப்பதும் அதைப் பெருமையாக வீரமாகப் பேசுவதுமே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையே. இப்பொழுது நடந்துள்ளது அதன் தொடர்ச்சி மட்டுமே அன்றி புதிதாகவோ தீடீரென்றோ நடப்பது அல்ல. அங்கு பள்ளி அறையை பள்ளி அறையாக மாற்றிய சம்பவங்கள் இதற்கு முன்பாக ஏராளமாக நடந்துள்ளன இனியும் தொடரும்.

இந்த லட்சணத்தில் கவர்னர் மீது திமுக புகார் கூறி போராட்டம் நடத்தியுள்ளது. கவர்னர் 80 வயதை நெருங்கும் ஒரு முதியவர். வட நாட்டுக்காரர். வட நாட்டில் கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்துவதும் பெரியவர்கள் அன்பாக தொட்டு ஆசீர்வதிப்பதும் அவர்களின் கலாசாரத்தில் ஒரு பகுதி. ஆனால் கற்பு கற்பு என்று கதறும் தமிழகத்திலோ பெண்களின் இடுப்பைக் கிள்ளுவது முதல் ரேப் செய்வது வரை கிட்டத்தட்ட தமிழர்களின் கலாசாராமாகவே மாறி விட்டது.

உள்ளுக்குள் ஆயிரம் அராஜகங்கள் செய்யும் இதே திராவிட இயக்கக் கட்சிக்காரர்கள்தான் இன்று தெரியாமல் தன் வயதின் உரிமையுடன் ஒரு பெண் நிருபரின் கன்னத்தில் லேசாகத் தொட உடனே அவரை பெரும் காமக் கொடூரன் அளவுக்கு வில்லனாக்கி விட்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் கற்பு என்பது மாதிரி கேலிக்குள்ளான ஒரு வார்த்தை வேறு எதுவும் இருக்க முடியாது. கற்பைப் பற்றி பேச அருகதையில்லாதவர்கள் பெரும்பாலான தமிழர்கள். அடிப்படை நேர்மையும் நாணயமும் இல்லாத அற்பர்கள் அனைவரும் இன்று கவர்னரை தூக்கில் போட வேண்டும் என்று கிளம்பியுள்ளார்கள்.

இதில் சில காங்கிரஸ்கார நேரு மாமாவின் சீடர்கள் சொல்லுவது இன்னும் காமெடி. நேரு தொட்டுக் கொஞ்சிய பெண்களின் ஃபோட்டோக்களை வைத்து பெரும் ஆல்பமே போடலாம். ஆனாலும் இவர்கள் சொல்லுகிறார்கள் கவர்னர் அந்தப் பெண்ணின் கன்னத்தில் தட்டியது தவறாம். இதே ஆட்கள் சீதாராமையா பற்றியும் நாராயண திவாரி பற்றியும் நேரு பற்றியும் பெருமையாக பேசுவார்கள்.

ஆக கவர்னர் பிஜேபி கவர்னர் என்பதினால் இவர்களுக்கு தீடீரென்று பண்பாடு கலாசாரம் எல்லாம் கிளம்பி விடுகிறது. இந்த வெட்கம் கெட்டவர்கள் கவர்னரைக் குறை சொல்லும் முன்னால் ஒரு முறை தங்கள் நேரு மாமாவின் லீலைகளையெல்லாம் ஒரு முறை தங்கள் காங்கிரஸ் கண்ணாடியில் பார்த்து விட்டு குறை சொல்ல வரவும் இல்லாவிடில் நாறி விடும் நாறி.

அடுத்ததாக சில முட்டாள்கள் உளறுகிறார்கள்… கவர்னர் தேவையில்லாமல் ஊருக்கு முன்பாக விசாரணை வைத்தாராம். அது குறையாம். இந்த முட்டாள்களுக்கு கவர்னர்தான் பல்கலைக் கழகங்களின் தலைவர் என்ற அடிப்படை உண்மை கூடத் தெரியாது. தன் ஆளுகையின் கீழே வரும் பல்கலைக் கழகங்களில் எங்கும் ஒரு ஊழலோ, செக்ஸ் புகாரோ கிளம்பும் பொழுது நிர்வாக ரீதியாக விசாரணை நடத்தி அதன் முடிவுகளின் அடிப்படையில் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டியது கவர்னரது கடமைகளில் ஒன்று.

கிரிமினல் விசாரணை வேறு நிர்வாக விசாரணை வேறு. இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கலாம். இதே மதுரை யுனிவர்சிடியில் முன்பு மார்க் ஷீட் ஊழல் புகார்கள் வந்த பொழுது சிபிசிஐடியின் கிரிமினல் விசாரணையும் துணை வேந்தரால் நியமிக்கப் பட்ட நீதிபதியின் நிர்வாக விசாரணையும் ஒரே நேரத்தில் நடந்ததுண்டு. ஆகையால் இது புதிதோ தவறோ கிடையாது.

கவர்னர் அமைதியாக இருந்திருந்தால் அவர் மீது வதந்தி கிளப்பி புகாரைப் பெரிதாக்கி மேகாலயா கவர்னர் சண்முகநாதனை வீட்டுக்கு அனுப்பியது போலச் செய்திருக்கலாம். ஆனால் இந்த கவர்னர் முந்திக் கொண்டு தன் நிலையைத் தெளிவு படுத்தியதோடு விசாரணையையும் உத்தரவிட்டுள்ளார். ஆகவே கவர்னரை கவிழ்ப்பதோ அதன் மூலமாக மோடியை அசிங்கப் படுத்துவதோ முடியாமல் போய் விட்டது.

அதனால் ஏற்பட்ட கடுப்பில் இந்த காங்கிரஸ்காரர்கள் கவர்னர் மீது காறி உமிழ்கிறார்கள். இவர்களின் நோக்கம் அந்தப் பெண்ணின் கற்போ கவர்னரின் நடத்தையோ அல்ல… இவர்களின் ஒரே குறி இதை முன் வைத்து மோடியின் பெயரைக் கெடுக்க முடியாமல் போயிற்றே என்ற வயிற்றெரிச்சல் மட்டுமே! அதனாலேயே இப்பொழுது கவர்னர் பதவியையே நீக்க வேண்டும் என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.

கடைசியாக இந்த விஷயத்தில் கவர்னர் மீதோ அல்லது இந்த விவகாரத்தில் பேசுவதற்கு எந்தவிதமான அருகதையும் தகுதியும் இல்லாதவர்கள் திமுக காரர்கள்.

திமுக காரர்கள் என்றாலே ரேப்பிஸ்டுகள்தான். அதில் அண்ணாத்துரை, கருணாநிதி, ஸ்டாலின் முதல் இன்றைய கட்சிக்காரர்கள் வரை எவனும் விதி விலக்குக் கிடையாது.

அண்ணாத்துரையின் அசிங்கங்கள் பற்றி அவர்கள் கட்சியின் ஆஸ்தான கவிஞர் பாரதிதாசன் தன் குயில் பத்திரிகையில் விலாவாரியாக எழுதியுள்ளார். ஆனைமுத்து திக வீரமணி குறித்து எழுதியுள்ளார். கண்ணதாசன் கருணாநிதியின் கேவலமான லீலைகளை பட்டியலிட்டுள்ளார்.

ஊரறிந்த ஒரு ரேப்பிஸ்டாக பெண்களைக் கடத்திச் சென்று கற்பழிக்கும் ஒரு காமக்கொடூரனாக அறியப் பட்டவர் இன்றைய செயல். திருச்சி க்ளைவ் ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவர்கள் அன்பில் தர்மலிங்கத்தின் வைப்பாட்டியை கேலி செய்து விட்டார்கள் என்பதற்காக போலீஸை விட்டு மாணவர்கள் மீது மரண வெறித் தாக்குதல் நடத்தியது இந்தக் கருணாநிதிதான்

அசிங்கத்தின் ஆபாசத்தின் அருவருப்பின் மொத்த உருவம்தான் அண்ணாத்துரையும், ஈ வெராவும், அன்பழகனும், அன்பிலும், கருணாநிதியும், ஸ்டாலினும் ஒட்டு மொத்த திமுக ரவுடிகளுமே. இவர்கள் கவர்னரை எதிர்த்து போராட்டம் நடத்தக் கிளம்பியதினால்தான் எச்.ராஜா கடுமையாக தன் விமர்சனங்களை வைக்க நேர்ந்தது. அவர் செய்தது முற்றிலும் சரியே. நான் ஹெச்.ராஜா அவர்களை முழுக்க முழுக்க ஆதரிக்கிறேன்.

அந்த நிருபர் பெண்ணைக் கண்டால் பரிதாபமாக உள்ளது. அவருக்கு கவர்னர் தொட்டதினால் அருவருப்பு ஏற்பட்டு விட்டதாம். அவரது நோக்கம் இதை வைத்து கவர்னர் மீதும் மோடி மீதும் அவதூறு கிளப்புவது மட்டுமே என்பது அவரது ட்வீட்களைப் படிக்கும் பொழுது தெரிய வருகிறது. அவளைத் தொட்டதினால் கவர்னர்தான் தன் கைகளை பினாயில் விட்டுக் கழுவ வேண்டும்.

அசிங்கம் பிடித்த கேவலமான பிறவிகள். படிப்பறிவில்லாத கேவலமான பொது அறிவில்லாத பொறுக்கிகளே தமிழகத்தில் பெரும்பாலும் மீடியாவில் வேலைக்கு வருகிறார்கள். இந்தப் பெண்ணும் அதற்கு விதிவிலக்கில்லை என்பது தெரிகிறது. பல்கலைக் கழகங்களை விடவும் அதிக அளவில் செக்ஸுவல் அப்யூஸ் நடப்பது மீடியாக்களில்தான். பெரிய ஆட்களுடன் படுக்காமல் அவர்களால் ஒரு ரிப்போர்ட்டராகவோ செய்தி வாசிப்பவரோ ஆகி விட முடியாது என்பது சமீபத்திய பல புகார்களின் மூலம் வெளியே வந்த அசிங்கம்.

இந்த மொகரக்கட்டைகள்தான் கவர்னரைக் கேள்விக் கேட்க்கக் கிளம்பி விடுகிறார்கள். தமிழகத்தின் மிகக் கேவலமான ஈனமான அசிங்கமான அருவருப்பான ஆபாசமான இழிந்த ஈனப் பிறவிகள் அதன் பெரும்பாலான மீடியா ஆட்களே.

ஒரு சில விதி விலக்குகள் இருக்கிறார்கள். நான் அவர்களை மட்டுமே மதிக்கிறேன். மற்றபடி பொதுவாக தமிழகத்தின் ஒட்டுமொத்த மீடியாவுமே கிரிமினல்களின் பொறுக்கிகளின் ப்ளாக்மெயில் பேர்வழிகளின் பிடிகளில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன.

நிர்மலாதேவி விவகாரத்தின் பின்ணணி தீர்க்கமாக விசாரிக்கப் பட வேண்டும். அது திட்டமிட்டு செயல் படுத்தப் பட்ட ஒரு சதித்திட்டத்தின் அங்கமாகத் தெரிகிறது. இதில் கவர்னர் பெயர் இழுக்கப் பட்டிருப்பதினால் அவர் தலையிட்டு இதில் சம்பந்தப் பட்ட அனைவரையும் கைது செய்து கடுமையாக தண்டிக்க முயற்சி எடுப்பார் என்று நம்புகிறேன்.

பிற பிஜேபி தலைவர்கள் போல அமைதியாக இல்லாமல் தன் மீது ஒரு புகார் எழுந்தவுடனேயே உடனடியாக அதை எதிர் கொண்டு தன்னிலை விளக்கம் அளித்த கவர்னரின் முன் ஜாக்கிரதை நடவடிக்கை பாராட்டுக்குரியது.

– இவ்வாறு பல மட்டத்திலும் குற்றச்சாட்டுகளைக் கிளப்பி, திருமலை.ச என்பவர் இட்ட பதிவினைத்தான், அப்படியே பார்வர்ட் செய்துள்ளார் எஸ்.வி.சேகர். இவ்வளவு நீள கட்டுரையை, அவர் ஒவ்வொரு வரியும் படித்துப் பார்த்திருக்க வேண்டும்.

ஆனால் எஸ்வி சேகர் அதைச் செய்யவில்லை. இந்நிலையில், தாம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரி, ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கிறார்.

அந்தக் கடிதம்…

பொதுவாகவே, நாலு வரி படித்த உடனே நன்றாக இருக்கிறது என்று எண்ணியோ, அல்லது நமக்கு அறிமுகமானவர், நண்பர், நம்பிக்கைக்கு உரியவர் என்று நினைத்தோ, அவர் எதை எழுதியிருந்தாலும் அப்படியே பார்வர்ட் செய்வது மிகப் பெரும் சிக்கலைக் கொண்டு வரும் என்பதை எஸ்.வி.சேகர் உணர்ந்திருக்க வேண்டும்.

ஆனால், எஸ்.வி.சேகர் பார்வர்ட் செய்த இவ்வளவு பெரிய கட்டுரையில், பத்திரிகையாளர்கள் குறித்து வரும் குறிப்பிட்ட பகுதியை மட்டும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து இன்னொரு அரசியலும் செய்யப் பட்டிருக்கிறது என்பது, இந்தப் பிரச்னையின் மற்றொரு புறத்தில் உள்ள அசிங்கம்; அவதூறு!

ஏற்கெனவே ஒரு டிவி., நிருபரைப் பார்த்து, கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல் நீங்க அழகா இருக்கீங்க என்று சொல்லி பிரச்னை கிளப்பினார் சுகாதர அமைச்சர் விஜயபாஸ்கர்.

இப்பொழுது, அனைத்து பத்திரிகையாள சங்கங்களும் இந்த நிகழ்வுக்காக கொதித்துப் போய் புகார்களைக் கொடுத்துள்ளார்கள். இதன் மூலம் ஒரு விழிப்பு உணர்வு ஏற்பட்டு, களத்தில் பணி புரியும் பெண் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தால், அவச் சொற்கள் ஏதும் இல்லாது போனால், அதுவே மிகப் பெரும் ஆறுதலாக அமையும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe