கடலூரில் கடற்கரையில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு!

உள்ளூர் செய்திகள் சென்னை லைஃப் ஸ்டைல்
cuddalore silver beach - 2026

கடலூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப் பட்டுள்ளது. கடல் நீர் உட்புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு கடந்த இரண்டு நாட்களாக ஏற்றப்பட்டுள்ளது

இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்

இந்நிலையில் கடலூர் சில்வர் பீச்சில் மாலையிலிருந்து கடல் சீற்றம் காரணமாக கடற்கரை நோக்கி 100 மீட்டர் அளவில் கடல் அலைகள் வந்தவண்ணம் உள்ளது. இதனால் காவல்துறையினர் பொதுமக்களை கடற்கரைப் பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுத்தனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.