பொங்கல் பண்டிகைக்காக 24,708 சிறப்பு பேருந்துகள்: எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவிப்பு!

Published:

minister mr vijayabhaskar - 2026

வரும் பொங்கல் பண்டிகைக்காக 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பண்டியை ஒட்டி வெளியூர்களுக்கு செல்வோர் வசதிக்காக 11,12,13,14 நான்கு நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! இதில் சென்னையில் இருந்து 14263 பேருந்துகள் இயக்கப்படும்! மொத்தமாக 24708 பேருந்துகள் இயக்கப்படும் என்று அவர் தகவல் தெரிவித்தார்.

சிறப்பு பேருந்துகளில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வரும் ஜன.9ஆம் தேதி அன்று சிறப்பு மையங்கள் திறக்கப்படும், பண்டிகை முடிந்து திரும்பி வருவோருக்காக பேருந்துகள் இயக்குவது குறித்து ஜனவரி 2ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்றார்.

வழக்கம் போல், சிறப்புப் பேருந்துகள் மாதவரம், தாம்பரம் மெப்ஸ், கே.கே நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும், கோயம்பேட்டில் இருந்தும் இயக்கப்படும் என்றார் விஜயபாஸ்கர்!

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img