thirumavalavan posters - 2026

தென்காசி: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே அரசு சொத்துகள், கட்டடங்களில் வரையப் பட்டுள்ள கட்சி விளம்பரங்களை ஊர்ப் பிரமுகர்களே முன்னின்று அழித்தனர்.

அரசு சொத்துக்கள் மீது எழுதப் பட்ட விளம்பரங்கள், சின்னங்கள், வாசகங்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சி, மற்றும் ஜாதி ரீதியிலான வண்ணங்களை வெள்ளை பூசி அழித்தனர்.

செங்கோட்டை அருகே புளியரை எல்லை பகுதியிலுள்ள தெற்குமேடு பாக்யா நகரில் அரசு சொத்துக்கள் மீது சாதி, கட்சி ரீதியிலான வண்ணம் பூசப்பட்ட மின்கம்பம், தண்ணீர் தொட்டி அரசு அலுவலக கட்டடங்களில் பூசப்பட்டிருந்த வண்ணங்களை ஊர்ப் பெரியோர்கள், அந்தந்த சமுதாய நாட்டாண்மைகள், தெற்குமேடு பஞ்சாயத்து செயலாளர், அரசு துணை ஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பு அலுவலர் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த சமுதாய நாட்டாண்மைகள் தங்கள் செலவிலேயே வெள்ளையடித்து அழித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending