பேருந்தில் பயணியிடம் ரூ. 4 லட்சம் திருட்டு: தப்பியோடிய 2 பேர் கைது

4 lack theftசென்னை: திருவள்ளூர் மாவட்டம். மணவாளண் நகரைச் சேர்ந்த சவுக்கு மர வியாபாரி வெங்கட்ராஜா. (64) இவர் புதன்கிழமை நேற்று மதியம் சுமார் 2.15 மணி அளவில் சவுக்குமரத் தோப்பு உரிமையாளர்களுக்கு கொடுப்பதற்காக மயிலாப்பூர் டாக்டர் நடேசன் தெருவில் உள்ள வி.எம்.சங்கரன் அண்ட் கம்பெனியிலிருந்து ரூ. 4 லட்சம் பெற்றுக் கொண்டு. அதை டவல் துணியில் சுற்றி தனது கைப்பையில் வைத்துக் கொண்டு. பேருந்து எண். 21 ல் ஏறி. மயிலாப்பூரிலிருந்து பாரிமுனையை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். பேருந்து அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் வணிக வளாகம் தாண்டி மின்வாரிய அலுவலகம் அருகில் வரும்போது. வெங்கட்ராஜா பணம் வைத்திருந்த கைப்பையின் எடை திடீரென குறைந்ததை அறிந்து. கைப்பையை எடுத்துப் பார்த்ததில். பையில் பணம் இல்லை என்பதையறிந்து. பணம் திருடுபோய்விட்டது என்று அலறியதால். பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் கூடியபோது புகார்தாரரின் அருகில் நின்று கொண்டும், புகார்தாரரிடம் நல்லமுறையில் பேசிக்கொண்டு அவரது கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருந்த இரு நபர்கள் மீது சந்தேகப்பட்டு. சோதனை செய்ய முயற்சி செய்தபோது. அந்த சந்தேக நபர்கள் இருவரும் ஒரு கட்டைப் பையுடன். சென்று கொண்டிருந்த பேருந்திலிருந்து இறங்கி ஓடினர், அப்போது வெங்கட்ராஜா மற்றும் பயணிகள் திருடன் என சத்தம் போட்டு. பேருந்தை நிறுத்தி அந்த நபர்களை துரத்தி சென்று கொண்டிருந்தபோது. அருகில் டாம்ஸ் ரோடு வழியாக மடக்கியபோது. அந் நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி தப்ப முயன்றனர், அச்சமயம் அருகில் பணியிலிருந்த சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலைய போலீசார் அந்த நபர்களை பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர், விசாரணையில். அவர்கள் கணேசன் மற்றும் விஸ்வநாதன் என்பதும். இருவரும் சேர்ந்து. பேருந்தில் பயணம் செய்யும்போது சவுக்கு வியாபாரி வெங்கட்ராஜா வைத்திருந்த கைப்பையிலிருந்து ரூ.4 லட்சம் பணத்தை திருடிக் கொண்டு பேருந்திலிருந்து தப்ப முயன்றபோது பிடிபட்டதை ஒப்புக் கொண்டனர். அதன் பேரில் கணேசன் மற்றும் விஸ்வநாதனை கைது செய்து. அவர்கள் திருடிய பணம் ரூ.4 லட்சம் மீட்கப்பட்டு. இருவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.