நடுங்க வைக்கும் கடுங் குளிரில் காஞ்சி மாவட்டம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
kanchi bus fogs - 2026

காஞ்சிபுரம்: நடுங்க வைக்கும் கடும் கடுங்குளிரில் காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மாலை, 6:00 மணிக்கெல்லாம் குளிர துவங்குகிறது. ஒரு சில இடங்களில், காலை9:00 மணி வரையிலும் பனி மூட்டத்தை காண முடிகிறது.

பனிப்பொழிவின் தாக்கம் பொது மக்களை வாட்டி வதைக்க ஆரம்பித்துள்ளது. வெளியே செல்லும் மக்கள் குளிரில் இருந்து பாதுகாக்கும் ஆடைகளை அணிந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

kanchi bus fogs3 - 2026

கடுமையான பனிப் பொழிவு காரணமாக வாகன ஒட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, தென்மாவட்டங்களில் இத்தகைய பனிப் பொழிவைக் கண்டிராத அரசுப் பேருந்து ஓட்டுனர்கள், தாங்கள் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் சென்னைக்கு வாகனங்களை ஓட்டிச் செல்வதாகக் கூறுகின்றனர்.

குறிப்பாக அதிகாலை வேளையில் சென்னைக்குச் சென்று சேரும் வண்ணம் வாகனங்களை ஓட்டி வரும் தாங்கள் அச்சத்துடனேயே வாகனங்களை ஓட்டிச் செல்வதாகக் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.