தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

Indian Meteorological Department - 2026

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்; தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.  கடந்த மார்ச்சில் துவங்கிய கோடை வெயில் மூன்று மாதங்களாக வாட்டி எடுத்து வருகிறது! நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்த நிலையில் வட மாநிலங்களில் தினமும் வெயில் அனல் காற்று வீசிவருகிறது!

தமிழகத்தில் சில நாள்கள் அனல் காற்றும் சில நாள்கள் ஈரப்பதம் மிக்க காற்றும் வீசுகிறது! இந்நிலையில் நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தின் பல பகுதிகளில் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் 24 ஆம் தேதி சில இடங்களில் இடியுடன் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது!

இன்றைய வானிலையைப் பொருத்தவரை விருதுநகர் கன்னியாகுமரி தேனி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்! 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்! சென்னையில் அதிகபட்சமாக, 37 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.