sengottai arpattam - 2026

சபரிமலை புனிதம் காக்கவும், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி இந்து பாரம்பரிய வழிபாட்டு முறைக்கு பாதிப்பு வராமல் காத்திட செங்கோட்டை நகர இந்து முன்னணி சார்பில் விழிப்புணர்வு தெருமுனைக் கூட்டம் செங்கோட்டை பாம்பே ஸ்டோர் அருகே இன்று நடந்தது.

இந்தக் கூட்டத்திற்கு நகர தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பா.ஜ.க தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சாக்கரடீஸ் சிறப்புரையாற்றினார். இதில் ஒன்றிய தலைவர் மாசாணம், துணைத்தலைவர் நாணயம் கணேசன், பாஜக வாசன்ஜி, கோமதிநாயகம், பேச்சிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகரச்செயலாளர் மூர்த்தி நன்றி கூறினார்.

puliyarai hindu munnani - 2026

இதே போல புளியரையில் ஒன்றிய தலைவர் மாசாணம் தலைமையில் நடந்தது. பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சாக்கரடீஸ் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொதுச் செயலாளர் வேலுச்சாமி, ஐயப்பா சேவா சங்க தலைவர் ஐயப்பன், புதூர் பேரூராட்சி தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending