நான் அதிமுக.,வில் தான் இருக்கிறேன்: அலறும் அன்வர் ராஜா எம்.பி.,!

உள்ளூர் செய்திகள் மதுரை லைஃப் ஸ்டைல்

anwarrajamp - 2026

நான் அதிமுக.,வில் தான் இருக்கிறேன் என்று உறுதிப் படுத்திக் கூறியிருக்கிறார் அன்வர் ராஜா எம்.பி.,!

தமிழகத்தில் ஆட்சியில் இருந்து அதிமுக., மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக.,வுடன் கூட்டணி வைத்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் அதிகாரபூர்வமற்ற வகையில் கடந்த நில நாட்களாக நடந்து வந்த நிலையில், ஒரு வேளை பாஜக., அதிமுக., கூட்டணி வைக்கப் பட்டால், கரூர் தம்பிதுரையும், ராமநாதபுரம் அன்வர் ராஜாவும் அதிமுக.,வில் இருந்து வெளியேறி விடுவார்கள் என்று அனுமானமாகக் கூறப் பட்டது.

அதிமுக., பாஜக., கூட்டணி அமைந்து விடக் கூடாதென்பதில் வெகு எச்சரிக்கையாக இருந்த திமுக., மற்றும் கூட்டணி, தோழமைக் கட்சிகள் அதற்கான வேலைகளைச் செய்து வந்தன.

இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி உறுதியானதை அடுத்து அன்வர் ராஜா, அதிமுக.,வில் இருந்து வெளியேறிவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. பாஜக.,வுக்கு எதிரான நபர்கள் என, இஸ்லாமியர்களை முன்னிறுத்தி திமுக., விடுதலைச் சிறுத்தைகள், ஜெயலலிதா போட்ட பிச்சையில் எம்மெல்யேயான தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் உள்ளிட்ட சிலர் பிரசாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில், நான் அதிமுகவில் இருந்து விலகியதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது என்று அன்வர் ராஜா, அதிமுக எம்.பி விளக்கம் அளித்துள்ளார்.

| #AnwarRaja | @AIADMKOfficial | @BJP4India | @BJP4TamilNadu

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.