பெங்களூரைத் தொடர்ந்து சென்னையில்… 176 கார்கள் எரிந்து நாசம்!

Published:

cars fire - 2026

சென்னை: சென்னை போரூர் அருகே ராமச்சந்திரா மருத்துவமனை எதிர்ப் புறத்தில் தனியார் கால் டாக்ஸிகள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தீவிபத்தில் 176 கார்கள் ஒரே இடத்தில் பற்றி எரிந்தன. சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்தப் புகையால் அந்தப் பகுதியே பெரும் கரி மண்டலமாகக் காட்சி அளித்தது. அருகில் உள்ள குப்பைக்கிடங்கில் முதலில் பற்றிய தீ, தொடர்ந்து கார் நிறுத்தும் இடத்திற்கு பரவியதாக கூறப் படுகிறது. கார் எரியும் பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.

நேற்று பெங்களூருவில் விமான கண்காட்சி நடந்தபோது, பார்க்கிங் பகுதியில் நிறுத்தப் பட்டிருந்த கார்கள் தீ பிடித்து எரிந்ததில் 300 கார்கள் சாம்பலாகின. இந்நிலையில் சென்னையில் மற்றொரு பெரும் கார் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img