தூத்துக்குடிக்கு வருகிறார் பியூஷ் கோயல்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை

bjp compaign - 2026

தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சியின் வாக்குச்சாவடி செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வருகிறார் மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் பியூஸ் கோயல்!

மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரிதுறை அமைச்சர் பியூஸ் கோயல் இன்று தமிழகம்  வருகிறார். காலை 10.50 மணியளவில் தூத்துக்குடியில் நாட்டு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அர்ப்பணிக்கிறார்.

என்எல்சி இந்தியா நிறுவனமும், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகமும் இணைந்து தூத்துக்குடியில் அமைத்துள்ள 1000 மெகாவாட் அனல் மின்நிலையத்தை அவர் தொடக்கி வைக்கிறார்.

விருதுநகர் மற்றும்  இராமநாதபுரம் மாவட்டங்களில் 150 மெகா வாட் சூரியமின் நிலையங்களையும் காணொளிக் காட்சி மூலம் பியூஸ் கோயல் திறந்து வைக்கிறார்.

பா.ஜ.க. நிகழ்ச்சியில் பங்கேற்கும் புயூஸ் கோயல், சேலத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.