விதிமீறல் பேனர்கள்: காஞ்சிபுரம் தமிழகத்தில் உள்ளதா? பல்லவ சாம்ராஜ்யத்தில் உள்ளதா?

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

12 Aug 05 High court - 2026

விதி மீறல் பேனர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக 2 வாரங்களில் அறிக்கை அளிக்க தலைமை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி பேனர் வைக்கப்படுகிறது என்றால் காஞ்சிபுரம் தமிழகத்தில் இருக்கிறதா? அல்லது பல்லவ சாம்ராஜ்ஜியத்தில் தொடர்கிறதா? – என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

பேனர் வைக்க விவிஐபி போன்ற மிக முக்கிய பிரமுகர்களுக்கு என தனி சட்டம் வைத்து அரசு அதிகாரிகள் செயல்படுகிறீர்களா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மெத்தனமாக செயல்பட்ட வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க கூடாது? என்று- சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

சென்னையில் விதிமீறல் பேனர்கள் இல்லை என அரசால் உறுதியாக தெரிவிக்க முடியுமா? என்று நீதிமன்றம் அரசுக்கு கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.