அக்ரி கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்ந்து மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் கைதாவார்?

நெல்லை: திருநெல்வேலியில் வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சி,.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், வேளாண் துறையின் தலைமைப் பொறியாளர் செந்திலும் கைதானார். இந்த வழக்கு விசாரணை முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும், இந்த விசாரணையில் மேலும் சில முக்கியப் புள்ளிகள் கைதாவார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளரான வெங்கடேசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் விரைவில் கைதாவார் என்று கூறப்படுகிறது.