இந்துக்களை ஏமாற்றவே இந்த நாடகம்: திமுக முன்னாள் அமைச்சர் பேச்சு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை

Sathur Ramachandran MLA - 2026

நாங்கள் திருநீறு பூசியே இந்துக்களை ஏமாற்றி விடுவோம் என்று திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ராஜபாளையத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியபோது தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பார்.

திமுக கூட்டணியில் உள்ள இந்துக்களை விட சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களுக்குத்தான் மோடியை விரட்டும் பொறுப்பு அதிகம் உள்ளது.

நாங்கள் திருநீறு பூசியே இந்துக்களை ஏமாற்றி விடுவோம்! அவர்களது வாக்குகளைக் கவர்ந்து விடுவோம். இந்துக்களின் ஓட்டுகளை திமுக., பெற்றுவிடும். எனவே மோடியை விரட்ட இப்படித்தான் வேடமணிந்து செயல்பட வேண்டும் என்று பேசினார் சாத்தூர் ராமசந்திரன்.

திமுக தற்போது மேற்கொண்டுள்ள கபட வேடத்துக்கு விளக்கம் கொடுத்து சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதும், இந்துக்களை ஏமாளிகள் போல் அவர் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது! இந்துக்கள் ஏமாளிகள் தான் என்று அவர் தீர்மானமாக பேசியது திமுகவின் செயல் திட்டத்தை காட்டுகிறது என்று கூறினர் இதனைக் கேட்டவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.