உடல் உறுப்புக்களை சீராக்கும் சீரக துவையல்!

Published:

sirakam - 2026

சீரக துவையல்


தேவையான பொருட்கள் :


சீரகம் – கால் கப்
இஞ்சி – சிறிய துண்டு
சின்ன வெங்காயம் – 15
புளி – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 7
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க தேவையான பொருட்கள்:

கடுகு, கறிவேப்பிலை – தேவைக்கு ஏற்ப
பெருங்காயத்தூள் – சிறிதளவு

jisiraka thuvail - 2026

செய்முறை:
சின்ன வெங்காயம், இஞ்சியை தோல் நீக்கி பொடியாக வெட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை தனித்தனியாக போட்டு வதக்கவும். வதக்கிய பொருட்கள் நன்றாக ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் கெட்டியாக அரைக்கவும்.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பாட்டி பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து துவையலில் சேர்த்து கலந்து பரிமாறவும். சூப்பரான சீரக துவையல் தயார்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

பயன்கள்: இந்த துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இது, பசியைத் தூண்டும், வாய்க் கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும்.

Related articles

Recent articles

spot_img