ஒட்டுமொத்தமாக ரூ. 15 லட்சமா? மாதந்தோறும் ரூ.6 ஆயிரமா? சிந்திப்பீர் வாக்காளரே.. சிந்திப்பீர்!

Published:

Rahul Gandhi Narendra Modi - 2026

மாதம் 6 ஆயிரம் ரூபாய் வீதம் வருடத்துக்கு ரூ. 72 ஆயிரம் போட்டு, அடுத்து ஆட்சியில் உள்ள ஐந்து வருடங்களில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கொடுக்க இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் கணிதப் புலிகள் நிதி அமைச்சக சிறுத்தைகள் கூறியுள்ளனர். .

இப்போதும் மோடி சொன்ன அந்த 15 லட்ச ரூபாய் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் மோடியோ, நான் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் அப்படி போடுவதாக சொல்லவில்லை; கருப்புப் பணத்தை மீட்டால் இந்நேரம் ஒவ்வொருவர் வங்கியிலும் ரூ. 15 லட்சம் இருக்கும் அளவுக்கு ஒட்டுமொத்தமாக சுவிஸ் வங்கியில் இவர்கள் கொள்ளை அடித்து கருப்பு பணத்தை சேர்த்திருக்கிறார்கள் என்றுதான் சொன்னேன் என்கிறார்.

onrekalpakkanaledu copy - 2026

மோடிக்கு பதிலாக… இந்நேரம் கருணாநிதியாக இருந்திருந்தால்… என்ன சொல்வார்?!

அன்பார்ந்த மக்களே ஏழைகளின் சிரமங்களை நன்கு உணர்ந்து இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தி அவர்களை இல்லாமைகளிலிருந்து வளமை மிக்கவர்களாக மாற்றுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு வருகிறேன்..

ALSO READ:  அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

ஆனால் இந்த காங்கிரசார் எல்லாவற்றையும் கெடுத்துக் கொண்டு வருகிறார்கள்! நான் ஸ்விஸ் வங்கியில் பேசினேன்… ஸ்விட்சர்லாந்து நாட்டுடன் கொடுமையான சிரமங்களை அனுபவித்து, நம் நாட்டின் ஏழைபாழைகள் படும் சிரமங்களைஎல்லாம் நான் அனுபவித்து, அந்த சிரமம் எப்படி என்பதை உணர்ந்துதான்  பல்வேறு ஒப்பந்தங்களை போட்டு சுவிட்சர்லாந்து வங்கியில் போடப்பட்டுள்ள கருப்பு பணத்தை எல்லாம் இங்கே கொண்டுவர வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்தேன்

ஆனால் இந்த காங்கிரஸ்காரர்கள் தங்களது பணம் சுவிட்சர்லாந்து வங்கியில் இருப்பதை வெளியில் எக்காரணம் கொண்டும் யாரும் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக எவ்வளவு தடைகளையும் தாமதங்களையும் என்னைப் பற்றிய அவதூறு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார்கள்?!

இந்த முறை நான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் எப்படியும் அவர்களது கருப்பு பணத்தை எல்லாம் மீட்டு .. இந்த நாட்டுக்குக் கொண்டு வந்து, உங்களது வங்கிக் கணக்கில் சேர்த்து விடுவேன்! டிஜிட்டல் இந்தியா தொழில்நுட்பம் இன்னொன்றையும் சாத்தியமாக்கி இருக்கிறது. இதற்காகவே தான் டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தையே தொடங்கினோம்… ஸ்விஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணத்தை அப்படியே நேரடியாக இந்தியக் குடிமக்களின் வங்கிக் கணக்குகளில் டைரக்ட் டிரான்ஸ்பர் செய்து விடுவோம்.

ALSO READ:  வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மறு நாள் காலை நீங்கள் உங்கள் வங்கியில் போய் செக் செய்தால், அதில் ரூ. 15 லட்சம் இருக்கும். அதைப் பார்த்து நீங்கள் மயங்கிப் போய் அங்கேயே சரிந்துவிடுவீர்கள்.

அப்படி நான் ரூ. 15 லட்சத்தை சேர்த்து விட்டால் நான் சொன்ன வாக்கு சத்தியமாகிவிடும் என்பதற்காகவே காங்கிரசார் என்னை இந்தத் தேர்தலில் வீழ்த்துவதற்காக பாகிஸ்தானுடனும் முஸ்லிம்களுடன் இன்னும் கிறிஸ்துவ அமைப்புகளுடனும் கைகோர்த்து செயல்படுகிறார்கள்

ஆகவே இந்த முறை காங்கிரஸ்காரர்களுக்கு நீங்கள் ஓட்டு போட்டீர்களானால் … எதிர்க்கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்தீர்களானால்… நான் உங்களுக்கு தருவதாக வாக்களித்த 15 லட்சம் உங்களுக்கு கிடைக்காமலேயே போய்விடும்! இதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்! நீங்கள் வாக்குச் சாவடிக்கு செல்லும் முன்னால், ஒட்டுமொத்தமாக ரூ. 15 லட்சமா? அல்லது மாதந்தோறும் ரூ. 6 ஆயிரம் போதுமா என்பதை சிந்தித்து முடிவு செய்யுங்கள்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img