போர்க்களம் வருவதற்குள் அடுத்த படம்..! தயாராகிட்டார் தலைவர் ரஜினி..!

Published:

petta rajini - 2026

ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார். படத்தின் தொடக்க வேலைகள் நடைபெற்றுள்ளன.

சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் வைத்து, அடுத்து ரஜினி நடிக்கப் போகும் படத்தின் கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில், புகைப்படம் எடுக்கும் பணி நடந்துள்ளது. இந்த புகைப்படங்கள் வெளியாகும் போது, தலைவர் ரஜினியின் கதாபாத்திரம் என்ன என்பது தெரியும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.

இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அரசியல், தாதாக்கள், அதிரடி என்று விறுவிறுப்பாக திரைக் கதையை உருவாக்கி இருக்கின்றனராம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் 10ஆம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது. ஒரு மாதம் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்துவர் என்றும், தேர்தல் நாளான 18–ஆம் தேதி மட்டும் ரஜினி சென்னைக்கு பறந்து வந்து வாக்களித்துவிட்டு மீண்டும் மும்பை சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறுகின்றனர்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

ரஜினி படம் குறித்த ரகசியங்கள், அவரது கதாபாத்திரம் கதை குறித்து சமூக வலைத்தளங்களில் லீக் ஆவதைத் தடுக்க படு பயங்கர பாதுகாப்பெல்லாம் போட்டுள்ளனர் படக்குழுவினர்.

இந்தப் படத்தில், சந்திரமுகி படத்துக்குப் பின்னர் ரஜினியுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா. மேலும், சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு இணைந்து நடனம் ஆடி இருந்தார் நயன்தாரா!.

Related articles

Recent articles

spot_img