4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள்… திமுக அறிவிப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம்

mkstalin muslimleagemeeting - 2026

4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.

அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நான்கு தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை தற்போது அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, அரவக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். சூலூரில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி போட்டியிடுகிறார்!

ஒட்டப்பிடாரத்தில் எம்.சி.சண்முகையாவும் திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணனும் போட்டியிடுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.