மதன்லால் சைனி மறைவு: பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு!!

Published:

madanlal saini1 - 2026

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மதன் லால் சைனி(75) நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு பாஜக., தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

மதன்லால் சைனி மறைவை அடுத்து, இன்று தில்லியில் நடைபெறவிருந்த பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

madanlal saini - 2026பாஜக மாநிலங்களவை உறுப்பினரான மதன் லால் சைனி நுரையீரல் தொற்று காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தனது 75 ஆவது வயதில் திங்கள்கிழமை நேற்று மாலை அவர் காலமானார்.

அவரது மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் மதன் லால் சைனி மறைவை அடுத்து, பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Related articles

Recent articles

spot_img