பிக்பாஸுக்கு ‘தலையா’ தலைகாட்ட ஒரு எபிசோடுக்கு என்ன ரேட்டு தெரியுமா?! தலை சுத்தாம படிங்க!

Published:

nagarjuna - 2026

ஆச்சு.. இப்போ தமிழிலும் பிக்பாஸ் சீஸன் 3 தொடங்கியாச்சு! ஆனா இந்த நியூஸு தெலுங்கு பிக்பாஸ் பற்றியது.

பிக்பாஸ் 3 தெலுங்கில் தொகுத்து வழங்கும் தலைவர் நாகார்ஜுனா அக்கினேனியின் ஒரு எபிசோட் ரேட்டு, பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

பிக்பாஸ் 3 தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பிக்பாஸ்-3 விவகாரம் அதற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் வெளியான ப்ரமோ மூலம் நாகார்ஜுனா இந்த சீசனில் தலைவராக தலைகாட்டுவார் என்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. லேட்டஸ்ட் ரிப்போர்ட் படி நாகார்ஜுனா ஒரு எபிசோடுக்கு 12 லட்ச ரூபாய் கேட்கிறாராம்.

வரப் போகும் பிக்பாஸ் சீஸன்-3 150 நாட்களுக்கு குறையாமல் நடக்கப்போகிறது.

இதில் ஹோஸ்ட்டாக தலை காட்டும் நாகார்ஜுனா, வாரக் கடைசி நாட்களில் மட்டுமே வருவார்.

மேலும் பிக்பாஸ் வீடும் கூட, நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டூடியோவைச் சேர்ந்த அன்னபூர்ணா (ஏழு ஏக்கர்) வளாகத்தில் அமைக்கப் பட்டுள்ளது.

நாகார்ஜுனா “மீலோ எவரு கோடீஸ்வருடு”வுக்கு ரூ. 7 லட்சம் வாங்கினாராம். இது அமிதாப்பச்சன் ஹிந்தியில் செய்த ‘கோன் பனேகா கரோர்பதி’யின் தெலுகு வெர்ஷன்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

நாகார்ஜுனா இரண்டு சீசன் செய்த பின்னர், அது சிரஞ்சீவிக்கு கைமாறியது. நாகார்ஜுனா சற்று கறாரான பிஸினஸ் மேன் என்று அறியப் படுபவர். எனவே இந்த ஆஃபரை அவர் அவ்வளவு எளிதில் இழக்கமாட்டார் என்கிறார்கள்.

சல்மான்கான் ஹிந்தி பிக்பாஸில் தலைவராக தலை காட்ட ஒரு எபிசோடுக்கு 13 கோடி ரூபாய் வாங்குகிறாராம்!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img