அமைப்புசாரா கட்டடத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்க்கு உதவித் தொகை வழங்க உத்தரவு

Published:

madurai-branch-high-court அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களின் நலவாரிய உறுப்பினர்களுக்கு உடனடியாக உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று மாநில சமூகப் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு மதுரை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்க வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, முதியோர் ஓய்வுதியம் ஆகியவை முறையாக வழங்காமல் தாமதம் ஏற்படுவதாக அமைப்பு சாரா தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கடந்த நாண்கு ஆண்டுகளாக புகார் தெரிவித்து வந்தனர் . பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர் ;. இதனை தொடர்ந்து பாரத காந்திஜி அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திர காந்தி, மதுரை உயர் நீதி மன்றத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு உடனடியாக அரசு உதவித்தொகை மற்றும் ஓய்வுதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர் . இதனை ஏற்று விசாரணை செய்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் சமுக பாதுகாப்பு துறைக்கு உதவித்தொகையை உடனடியாக வழங்கும்படி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார் இதுபற்றி நீதிபதி தமது உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்திய அரசமைப்பு சட்ட விதிகளின் படி அரசின் சலுகைகளை பெற அமைப்பு சாரா கட்டிட தொழிலாளர்கள் தகுதியானவர்கள் எனவே அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, முதியோர் ஓய்வவூதியம் ஆகிய உதவித்தொகைகளை வரும் எட்டு வாரகாலத்திற்குள் வழங்குமாறு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி கர்ணன் தமது தீர்ப்பில் கூறியுள்ளார் செய்தி;செ.பிரமநாயகம்-தென்காசி

Related articles

Recent articles

spot_img