தென்காசி ஜவுளிக்கடையில் அதிகாலை நேர்ந்த பயங்கர தீ விபத்து!

Published:

celebrations shop fire - 2026

தென்காசி : தென்காசியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் பழைய பேருந்து நிலையம் அருகே அம்மன் சந்நிதி தெருவில் உள்ள செலிப்ரேஷன்ஸ் என்ற ஜவுளிக்கடையில் இன்று (ஏப்.23) அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் விலையுயர்ந்த ஆடைகளும் பொருட்களும் தீயில் எரிந்து நாசமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.

நேற்று தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் கடும் மழையும் சூறைக்காற்றும் இருந்தது. மின்னல்வெட்டு இடியுடன் மழை பெய்தது.

இந்நிலையில் மின்னல் தாக்கி இந்த தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img