குண்டுவெடிப்பில் இந்திய அமைப்பு தொடர்பு என இலங்கை குற்றச்சாட்டு! நாங்கள் இல்லை என தவ்ஹீத் ஜமாஅத் அலறல்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

TNTJ - 2026

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில், இந்திய அமைப்பு தொடர்பு என இலங்கை அரசு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கை குண்டு வெடிப்புக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூறியுள்ளது.

நியூசிலாந்து தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தான் இலங்கையில் 320 பேரை கொன்ற தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதற்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பே காரணம். இந்த அமைப்புக்கு, இந்தியாவில் உள்ள ஒரு அமைப்போடு தொடர்பு இருக்கிறது – இலங்கை பாதுகாப்பு துணை அமைச்சர் ருவான் விஜேவர்தனே!

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர், அதனை மறுத்துள்ளனர். இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கூறப்படும் தேசிய தவ்ஹித் ஜமாத்திற்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் கூறியுள்ளது.

எந்த ஒரு இஸ்லாமியரும் வழிபாட்டு தலங்களிலும் அசம்பாவிதங்களையும் செய்ய மாட்டார்கள். இலங்கை குண்டு வெடிப்பில் எந்த அமைப்பினர் செய்திருந்தாலும் அவர்களை நாங்கள் கண்டிக்கிறோம். ஒருவர் தன்னையே அழித்து கொள்கிறார் என்றார் அவர் இஸ்லாமியராக இருக்க முடியாது. இறை நம்பிக்கை உள்ள எந்த முஸ்லீமும் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் பெயரை இணைத்திருப்பது கண்டனத்திற்குரியது” என்று கூறியுள்ளது அந்த அமைப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.