தென்காசி அருகே கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!

Published:

tenkasi alankulam 5 person died road accident - 2026
நெல்லை – தென்காசி சாலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த கரும்புளியூத்தில் தென்காசியில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற காரும், நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கைக்குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து ஏற்பட்டதை அடுத்து, லாரி ஓட்டுநர் தப்பியோடி விட்டார். தகவல் அறிந்த வந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இடை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.tenkasi alankulam 5 person died road accident2 - 2026

காரில் வந்தவர்கள் குற்றாலம் வந்து குளித்துவிட்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த 5 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்!

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img