வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்தது.
இதே போல நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அக்னி நட்சத்திரம் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால் தங்களது வீட்டை விட்டு வெளியே வர அஞ்சினர்.
இந்த நிலையில் இன்று மாலை 6.4 0 மணிக்கு திடீரென இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. நகரில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த திடீர் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகுழ்ச்சி அடைந்தனர்.



