விமான நிலையத்தில் பெண் பணியாளருக்கு முத்தம் கொடுத்த பயணி… கைது செய்த போலீஸ்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

chennai airport glass break - 2026

சென்னை விமான நிலையத்தில் பெண் பணியாளருக்கு முத்தம் கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

சென்னையில் இருந்து நேற்று மாலை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான துபாய்க்கு தனியார் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

இதில் செல்வதற்காக கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த 36 வயதான நபர் முகமது ஷெரீப் வந்தார். அவர் செல்வதற்காக தனியார் விமான நிறுவன மையத்திடம் போர்டிங் பாஸ் வாங்கச் சென்றார்

அப்போது அவர் அங்கிருந்த விமான நிலைய பெண் ஊழியரைப் பிடித்து இழுத்து முத்தம் கொடுத்தார். அந்தப் பெண் பணியாளர் கூச்சலிட்டதை அடுத்து. அந்த நபரைப் பிடித்த சக சக பயணிகள் அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்

இதை அடுத்து, விமான நிலைய போலீசார் முகமது ஷெரீப்பின் பயணத்தை ரத்து செய்து அவரை கைது செய்தனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.