ஜமாத் எதிர்ப்பு; போலீஸ் பாதுகாப்பில் அம்மனுக்கு பரிகார பூஜை!

Published:

kanyakumari pooja - 2026

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு வள்ளுவர் ஜங்ஷன் பகுதியில் உச்சிமாகாளி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் பல ஆண்டுகளாக வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு, வெள்ளிக்கிழமை அன்று, கோயிலில் பரிகார பூஜைகள் செய்ய நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்தனர்.

ஆனால், அம்மன் கோயிலில் பரிகார பூஜைகள் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் திருவிதாங்கோடு மற்றும் அஞ்சுவண்ணம் முஸ்லிம் ஜமாத்கள். அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்தனர்.
இதை அடுத்து தொடர்புடைய பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலிசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் பாதுகாப்பில் பரிகார பூஜைகள் நடைபெற்றன.

Related articles

Recent articles

spot_img