பேஸ்புக் தொடர்புகளால் சீரழியும் பெண்கள்! பாதுகாப்பாக இருக்க டிப்ஸ் தருகிறது போலீஸ்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் சென்னை தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

pollachi issue - 2026

சமூக வலைத்தளங்களால் பெண்கள் அதிகம் பாதிக்கப் படுவதாகவும் இதிலிருந்து அவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் சில டிப்ஸ்களுடன் ஒரு கையேட்டினைத் தயாரித்து வெளியிட்டுள்ளது போலீஸ்!

சமூக வலைதளங்கள் வாயிலாக காதல் வலைவீசி பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் குற்றங்களும் பலாத்காரம் செய்யும் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இதனால் போலீசார் பெரும் சிக்கலில் உள்ளனர். பல்வேறு புகார்கள் இது தொடர்பாக வருவதால் தலையை பிய்த்துக்கொண்டு சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் போலீசார் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தயாரித்து அதை அனைவருக்கும் விநியோகம் செய்து வருகின்றனர். குறிப்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பேஸ்புக் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக காதல் வலைவீசி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாற்றப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன!

இது தொடர்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது!

பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் முக்கியமாக பயன்படுத்தப்படுவது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது!

01 July25 Social media - 2026இந்நிலையில் இந்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் சில கையேடுகளை தயாரித்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வினியோகம் செய்து வருகின்றனர்!

அந்தக் கையேட்டில் பெண்களுக்கு சில அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன.

  • ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் நண்பர்களாக ஏற்கும்படி அழைப்பு விடுப்போரின் பின்னணியை ஆராய வேண்டும்

  • சந்தேகப்படும்படியான நபர்கள் உடன் தொடர்பில் இருக்க வேண்டாம்.

  • பிரபலங்களின் பெயர்களில் விஷமிகள் வலை வீசுவார்கள், அவர்களை நம்பிவிட வேண்டாம்

  • படித்தவர் நல்ல வேலையில் இருக்கிறார் என்பதற்காகவே எவரையும் நம்பிவிட வேண்டாம்!

  • சொந்த விருப்பு வெறுப்புகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டாம்!

  • அளவுக்கு அதிகமான நட்பு வட்டாரங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்!

  • பாலியல் ரீதியாக தொல்லை தருவது குறித்து காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும்!

  • சமூக வலைதளங்களை பயன்படுத்தும் 13 முதல் 25 வயதுடைய ஆண் பெண்களை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்

  • தங்களது மற்றும் குடும்பத்தாரின் படங்களை பதிவேற்றம் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்

  • வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்களை பயன்படுத்தும் பெண்கள் தங்கள் படங்களை அவற்றில் dp ஆக வைத்துக் கொண்டு வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்

  • இவ்வாறு இன்னும் சில அறிவுரைகள் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் வழங்கப் பட்டு இருக்கின்றன!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.