February 23, 2026, 3:48 PM
31.7 C
Chennai

சேலத்தில் கடத்தப் பட்ட குழந்தையை மீட்ட தனிப்படை போலீஸார்!

salem child theft - 2026

சேலத்தில் வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயதுக் குழந்தை கடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே தனிப்படை போலீசார் அதனை மீட்டனர்.

சேலம் மாவட்டத்தின் மையப்பகுதியான சத்திரம் அருகே உள்ள முள்ளாகாடு பகுதியில் பாலாஜி, நித்யா தம்பதியினர் 2 மகன்களுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டிற்கு வெளியே சாலையோரம் விளையாடி கொண்டிருந்த மூன்று வயது குழந்தை யோகேஸ்வரனை அந்த வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் கடத்தி சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையறிந்த பெற்றோர்கள் பதறிபோய் செவ்வாய்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

salem child theft1 - 2026அதே நேரம், முகத்தை மூடியபடி இரு பெண்கள் குழந்தையுடன் செல்லும் காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவானது.

இதனிடையே குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரைப் பெற்றுக் கொண்ட சேலம் மாநகர காவல் ஆணையர், உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்தார்.

பின்னர் எப்படியும் கடத்தப் பட்ட குழந்தையை விரைவில் கண்டு பிடித்து விடுவோம் என்றும், அப்பகுதியில் உள்ள 5 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யப் போவதாகவும் காவல் துறை அதிகாரிகள் கூறினர்.salem child theft2 - 2026

இந்நிலையில் டூ வீலரில் கடத்தப்பட்ட குழந்தையை சேலம் முள்ளகாடு பகுதியில் போலீஸார் பத்திரமாக மீட்டுள்ளனர். போலீஸார் தேடுவதை அறிந்து, குழந்தையைக் கடத்தியவர்கள் சேலத்தாம்பட்டி பகுதியில் அந்தக் குழந்தையை விட்டுச் சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதை அடுத்து, குழந்தையைக் கடத்தியவர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். மாநகர காவல் துறை சார்பில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாததால் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறினர்.

மாநகரம் முழுவதும் உள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாநகர காவல் துணை ஆணையர் தங்கதுரை நேரில் பார்வையிட்டார்.salem child theft3 - 2026

இந்த சாலையில் மாநகர காவல்துறை சார்பில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்காமல் இருப்பதால் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் திணறி வருவதாகக் கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories