தென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…!

TENKASI - 2026

தென்காசி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு சரிபார்க்கும் எந்திரங்கள் போன்றவை குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளன.

அங்கு வாக்கு எண்ணிக்கை நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையடுத்து அந்த வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு முன்பாக துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

அங்கு தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. கல்லூரி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

மேலும் தடையற்ற மின்சாரம் வழங்கும் வகையில், அங்கு ஜெனரேட்டரும் தயாராக வைக்கப்பட்டு உள்ளது.

ALSO READ:  தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

இதுகுறித்து தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் கூறுகையில், “மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவின்பேரில், குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மல்லிகா மேற்பார்வையில், 160 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான நாளை (வியாழக்கிழமை) இங்கு 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்“ என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories