திருவள்ளூர் அருகே… ரூ.20 லட்சம் மதிப்பிலான பதுக்கல் செம்மரம் பறிமுதல்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

redsand cholavaram - 2026

திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப் பட்டன.  வீட்டின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் வீட்டின் பதுக்கி வைத்திருந்த செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்

சோழவரம் அடுத்த மசூதி தெருவில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் செம்மரக்கட்டைகள் இருப்பதாக சோழவரம் காவல் ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

அதனடிப்படையில் இன்று ஆய்வாளர் தலைமையில் நாகராஜ் வீட்டின் ஆய்வு செய்தபோது இரண்டு டன் எடையுள்ள 27 செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அதனை பறிமுதல் செய்த சோழவரம் காவல்துறையினர் வீட்டின் உரிமையாளர் நாகராஜை தேடி வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் மதிப்பு 20 லட்சம் இருப்பதாகவும் அவற்றை திருவள்ளூர் மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.