சேலம் அருகே சாலை விபத்து: 4 பேர் பலி

சேலம்: சேலம் அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் மாவட்டம் நங்கவல்லி மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் இருந்து உறவினர்கள் குலதெய்வ வழிபாட்டுக்காக பெரம்பலூருக்கு 2 வேன்களில் சென்றனர். அவர்கள் சென்ற வேன் வாழப்பாடி அருகே தனியார் பேருந்து ஒன்றுடன் மோதியது. இந்த விபத்தில், வேனில் இருந்த பெண் உயிரிழ்ந்தார். 18 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் 3 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 15 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து வாழப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற‌னர்