ஸ்டாலின் ஒரு சந்தர்ப்பவாதி! நாயுடுவுடன் குலவினார்; ரெட்டியின் பதவியேற்பில் பங்கேற்றார்!

Published:

02 May29 Jayakumar - 2026

சென்னை; திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு சந்தர்ப்பவாதி. அவர் ராகுல் பற்றிப் பேசினார். சந்திரபாபு நாயுடுவுடன் கூடிக் குலவினார். இப்போது ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பில் பங்கேற்றார் என்று கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்.

மேலும், புதிய மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவதா வேண்டாமா என்பது குறித்து கட்சி முடிவு செய்யும் என்றார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவர், ” மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவதா வேண்டாமா என்பது குறித்தெல்லாம் கட்சி தான் முடிவு செய்யும்,” என்று கூறினார்.

மேலும் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ஜெயக்குமார், ”ஸ்டாலின் ஒரு சந்தர்ப்பவாதி. சந்திரபாபு நாயுடுவுடன் நட்பில் இருந்துவிட்டு, இன்று ஜெகன்மோகன்ரெட்டி பதவி ஏற்பில் பங்கேற்கிறார்,” என்று விமர்சித்தார்.

இதனிடையே, தேனி மக்களவைத் தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமாருக்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

*அதிமுக சார்பில் யார் அமைச்சராவார் என கேள்வி எழும்பிய நிலையில் ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. #OPRavindranathKumar | #PMNarendraModi

Related articles

Recent articles

spot_img