செல்போன் பேசியபடி பேரூந்து ஓட்டிய தலைநகரத்து 14 டிரைவர்கள் சஸ்பெண்டு….!

bus call 2 - 2026

சென்னையில் செல்போன் பேசியபடி பஸ் ஓட்டிய 14 டிரைவர்களை சஸ்பெண்டு செய்து போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

வாகனம் ஓட்டுபவர்கள் செல்போனில் பேசுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது குற்றம் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பஸ் ஓட்டும்போது செல்போனில் பேசுவதால் மிகப்பெரிய விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே அரசு மற்றும் மாநகர பஸ்களில் டிரைவர்கள், கண்டக்டர்கள் போன் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 வருடங்களில் மட்டும் சென்னை மாநகர பஸ்களில் டிரைவர்கள் செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டுவதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. 2014-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை கிட்டத்தட்ட 370 புகார்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் தற்போது புகார் உறுதி செய்யப்பட்ட 14 மாநகர பஸ் டிரைவர்கள், 3 கண்டக்டர்கள் மீது போக்குவரத்து துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

கடந்த 3 மாதங்களில் நடந்த விபத்துக்களின் அடிப்படையில் இந்த 17 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலை, ராயப்பேட்டை ஆஸ்பத்திரி, வேளச்சேரி சந்திப்பு ஆகிய இடங்களில் நடந்த மாநகர பஸ் விபத்துக்கள் டிரைவர்கள் செல்போனில் பேசியதால் அதிக விபத்துக்கள் ஏற்படுவது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறார்கள்.

பொதுமக்களும் புகார் செய்கிறார்கள். இதன் அடிப்படையில் விசாரணை செய்து மாநகர பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் அதன் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories