சிலைக்கடத்தல் வழக்குகளுக்கான உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு கலைப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

29 July19 Chenni highcourt - 2026

சென்னை: சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு கலைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சிலைக்கடத்தல் வழக்குகளுக்கான சிறப்பு உயர் நீதிமன்ற அமர்வு கலைக்கப் பட்டுள்ளது. அதற்கு பதிலாக, சிலைக்கடத்தல் வழக்குகளை சம்பந்தப் பட்ட நீதிபதிகளே விசாரிப்பர் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தற்போது, சிலைக் கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் சிறப்பு அமர்வை கலைத்து, உயர் நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.