மகன் கல்லூரி கட்டணம் கட்ட முடியாத விரக்தியில் தந்தை தற்கொலை!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சென்னை

death hang - 2026

தனது மகனின் கல்விக் கட்டணத்தை கட்ட இயலாத விரக்தியில் சினிமா ஒப்பனையாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

சென்னை கோடம்பாக்கம் பாரதி காலனி 5வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். 46 வயதான இவர் சினிமா துறையில் ஒப்பனையாளர் ஆக பணியாற்றி வருகிறார்! இவரது மனைவி ஹைமாவதி (41). இவர்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள்.

வெங்கட்ராமனுக்கு புதிய பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் அவரது குடும்பம் வறுமையால் வாடியுள்ளது. தற்போது தன் மகனை கல்லூரியில் சேர்க்க பலரிடம் கடன் கேட்டும் யாரும் கடன் தராத நிலையில் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார் வெங்கட்ராமன்.

இந்நிலையில் நேற்று காலை வீட்டின் மொட்டை மாடியில் உள்ள கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.