விசாரணைக்குச் சென்ற எஸ்.ஐ., மீது தாக்குதல்: 3 பேர் கைது!

Published:

arrested - 2026

சென்னை: விசாரணைக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்!

ஓட்டேரி நியூ பேரன் சாலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் இளைஞர் ஒருவரை சுற்றி வளைத்து தாக்கினர்!

இது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்த நிலையில் இரவு ரோந்துப் பணியில் இருந்த புளியந்தோப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் பா ஆனந்த் உள்ளிட்ட இருவர் சம்பவ இடத்திற்கு விசாரிக்க சென்றனர்!

அப்போது அங்கே மர்ம கும்பலால் தாக்கப்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த தீபக் (29 வயது) மற்றும் அவரது தந்தை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெங்கடேஸ்வர ராவ் ஆகியோர் மற்றும் அவரது நண்பர்கள் ஜெகதீஷ்குமார், ஜானகிராமன் ஆகியோர் இருந்துள்ளனர்.

அவர்களிடம் உதவி ஆய்வாளர் ஆனந்த் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தார். அந்நேரம் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதை அடுத்து ஆத்திரமடைந்த அவர்கள் எஸ்.ஐ., ஆனந்தை தாக்கியுள்ளனர்

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

உடன் சென்ற எஸ்.ஐ., போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து காயமடைந்த எஸ்ஐ ஆனந்தனை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர்ந்து,  இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உள்பட 3 பேரை கைது செய்தனர்!

Related articles

Recent articles

spot_img