
சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்கள் மற்றும் விருந்துகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
திருமணங்கள் மற்றும் பார்ட்டிகளில் நடனம் மிகவும் பிரபலம். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த பழக்கம் உள்ளது. எந்த விசேஷமான தருணமாக இருந்தாலும், அதில் மக்கள் நடனமாடுவதைக் காண முடிகின்றது.
இந்த நடன வீடியோக்களில் பல மிகவும் அழகாகவும், அற்புதமாகவும் இருக்கின்றன. இவை காண்பவர்களை மகிழ்விக்கச் செய்கின்றன. தற்போது இதுபோன்ற ஒரு நடன வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. ஆனால், இதைப் பார்த்தால் மகிழ்ச்சி இருக்குமோ இல்லையோ, அதிர்ச்சி கண்டிப்பாக இருக்கும்.
இந்த வீடியோவைப் (Viral Video) பார்ப்பவர்களால், தங்கள் கண்களையே நம்ப முடியாமலும் போகலாம். இந்த வீடியோவில் பலர் ஒரு விழாவில் நடனமாடிக்கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. ஆனால், அப்போது திடீரென ஒருவர் தனது பார்ட்னர் சரியாக நடனம் ஆடாததால், அவரை கன்னத்தில் அறையத் தொடங்குகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பார்க்கும் நமக்கே இப்படி இருந்தால், அடி வாங்கிய அந்த பெண்ணுக்கு எப்படி இருக்கும் என அனைவரும் பரிதாபப்படுகின்றனர்.
வைரலாகி வரும் இந்த வீடியோவில், பல தம்பதிகள் ஒரு நிகழ்ச்சிகளுக்கு சென்றிருப்பதை காண முடிகின்றது. இவர்கள் அனைவரும் ஜோடிகளாக நடனமாடுகிறார்கள். ஆனால் இவர்களில் ஒரு ஜோடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த வீடியோவில், ஒருவர் தனது ஜோடியை மிக வேகமாக நடனமாட வற்புறுத்துவதைக் காண முடிகின்றது. இதனால் டென்ஷன் ஆன அந்த பெண், தவறான நடன அசைவுகளை செய்யத் தொடங்குகிறார். இதைப் பார்த்த அந்த நபருக்கு கோபம் வருகிறது.
கோவத்தின் மிகுதியால், அவர் தனது ஜோடியை அறையத் தொடங்குகிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த ஜோடி அவரைத் தடுக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர் அடங்குவதாக இல்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
சரியாக நடனமாடவில்லை என்பதற்காக ஒருவர் தனது நடன ஜோடியை அடிப்பது போன்ற வீடியோக்கள் அரிதாகவே காணப்படுகின்றன. ஆனால், கோவப்பட்டு அடிக்கும் நபரும் மிகச்சிறப்பாக ஆடுகிறார் என்று கூற முடியாது. அவரும் மிக சாதாரணமாகவே ஆடுகிறார். ஆனால் தான் சூப்பராக ஆடுவதாக அவருக்கு தோன்றுகிறது போலும்!!
இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் (Netizens) கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். வீடியோவின் தலைப்பில், “தவறாக நடனமாடினால், அடி கிடைக்கும்” என்று எழுதப்பட்டுள்ளது.
https://www.instagram.com/reel/CY3DKhXIINp/?utm_source=ig_embed&utm_campaign=loading