நெல்லை மாவட்டம் தென்காசி அடுத்துள் பாவூர்சத்திரம் டாஸ்மாக் கடையில் கடையை உடைத்து ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
பாவூர்சத்திரத்தில் கடையம் ரோட்டில் இருந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நீண்ட நாட்களாக பொதுமக்கள் மற்றும் பெண்கள் போராடி வந்தனர் இந்த நிலையில் அந்த கடை மூடப்பட்டது. பின்னர் பாவூர்சத்திரத்தில் நெல்லை தென்காசி ரோட்டில் கேடிசி நகர் பஸ் நிறுத்தம் பின்புறம் காட்டுப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்தக் கடையில் 11 விற்பனையாளர்கள் மற்றும் 6 சூப்பர்வைசர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தக் கடையில் தினமும் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனையாகும் என்று கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு விற்பனையாளர்கள் வழக்கம் போல் இரவு விற்பனை முடிந்ததும்கடையை மூடி விட்டு சென்று விட்டனர். நேற்று காலையில் விற்பனையாளர்கள் வழக்கம்போல் கடையை திறக்க சென்றனர். அப்பொழுது கடையின் முன்பக்க கேட் மற்றும் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டும் அங்கு பொருத்தியிருந்த அலாரம் உடைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு தனலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் கொள்ளையர்கள் மதுபாட்டில்களை பெட்டி பெட்டியாக அப்படியே திருடி அவற்றை வேனில் ஏற்றி தப்பி சென்றுள்ளனர். திருட்டுப்போன மது பாட்டில்களின் மதிப்பு ரூபாய் 1 லட்சத்து 95 ஆயிரத்து 530 ஆகும் என்று கூறினர்.
இங்கு ரெகுலராக சரக்கு அடிக்க வருபவர் திட்டமிட்டு செய்த வேலையாக இருக்கும் எனத் தெரிகிறது அருகில் வீடுகள் இல்லை என்பதை உணர்ந்து ,அலாரம் இருப்பதை தெரிந்துகொண்டு அதை முதலில் உடைத்து பின்னர் கொள்ளை அடித்து சென்றிருக்கின்றனர் ,
டாஸ்மாக் கடையில் 2 லட்சம் மதிப்பிலான சரக்கை அடித்துச் சென்ற கில்லாடிகள்
Popular Categories



