புதிய கொள்கை பரப்புச் செயலாளர் விரைவில் அறிவிக்கப் படுவார்: தினகரன்

Published:

06 Aug13 TTV Dinakaran - 2026

சென்னை: அமமுக.,வின் புதிய கொள்கை பரப்புச் செயலாளர் விரைவில் அறிவிக்கப் படுவார் என்று கூறினார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

தங்க தமிழ்ச் செல்வன் விவகாரம் அமமுக.,வில் பெரும் புயலைக் கிளப்பி வரும் நிலையில், அவர் குறித்து தாம் அவசர ஆலோசனையில் ஈடுபடவில்லை என்றும், திட்டமிட்டுதான் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன் என்றும்  டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

தங்க தமிழச்செல்வன் விவகாரம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னர் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார் டிடிவி தினகரன்.

அப்போது அவர், , தங்க தமிழ்ச்செல்வன் பேசியது தொடர்பாக நிர்வாகிகள் புகார் அளித்தனர். அமமுகவில் இருந்து அவரை நீக்க எனக்கு அச்சமில்லை. புதிய கொள்கை பரப்பு செயலாளரை விரைவில் அறிவிக்கவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img