இரண்டாவது முறையாக பிரதமர் ஆன பின்… சென்னை வருகிறார் பிரதமர் மோடி!

Published:

modi swearing - 2026

இரண்டாவது முறையாக பிரதமர் ஆன பின்னர், பிரதமர் மோடி இம்மாதம் 3வது வாரம் தமிழகம் வர உள்ளார்.

இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் தமிழகம் வரும் பிரதமர் மோடி, சென்னை ஐஐடியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஐஐடி, இந்த ஆண்டு வைர விழாவைக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடியை அழைத்துள்ளது ஐஐடி.

இந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டுள்ளதாக மத்திய மனித வளத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. விழாவுக்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

முன்னர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் கருப்புக் கொடி காட்டி அரசியல் செய்து வந்த திமுக., மதிமுக., உள்ளிட்ட கட்சிகள் இப்போது என்ன செய்யப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Related articles

Recent articles

spot_img