கோடிக்கணக்கில் கொள்ளை போன கோயில் நிலங்கள் – கரூரில் திருத்தொண்டர்கள் சபை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

  தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில் நிலங்கள் தனியார் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து திருத்தொண்டர்கள் சபை செயலாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் அடிப்படையில் கோயில் நிலங்களை மீட்பது குறித்து அரசுக்கு உத்திரவிடப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் மூன்றாம் கட்ட ஆய்வில் லிங்கத்தூர் கைலாச நாதர் திருக்கோயில், நெரூர் அக்னீஸ்வரர் திருக்கோயில், திருமுக்கூடலூர் திருஅகத்தீஸ்வரர் திருகோயில் உள்ளிட்ட 15 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 500 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாகவும், இவற்றை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார் ராதாகிருஷ்ணன். மேலும், இந்த நிலங்களின் மதிப்பு பல கோடி ரூபாய் என்றும், பொதுமக்கள் கோயில் நிலங்களை வாங்குவதோ, விற்பதோ சட்டபடி குற்றம் என்றும் கூறினார். 16-04-15 Karur photo