
டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று- தமிழக முதல்வர் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன், செய்தியாளர்களிடம் பேசும் போது கூறினார்.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 60 நாட்களாக மேலூர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அரிட்டாபட்டி சென்ற பாஜக தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு நிச்சயமாக டங்ஸ்டன் திட்டத்தை கொண்டு வராது என உறுதி அளித்து இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை விவசாயிகள் ஏழு பேர் கொண்ட 11 பேர் குழுவினர் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் தலைமையில் மத்திய சுரங்கத் துறைஅமைச்சர் கிஷன் ரெட்டியை
சந்தித்து பேசினர்.
இதனைத் தொடர்ந்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நேற்று அறிவிப்பு வெளியிட்டார் .
இது மேலூர் பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த 21ம் தேதி டெல்லி சென்ற விவசாயிகள் இன்று காலை விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.
அவர்களுக்கு மேலூர், அரிட்டா பட்டி வள்ளாலபட்டி, கிடாரி பட்டி, கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் மதுரை விமான நிலைத்தில் வரவேற்பு அளித்தனர் .
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் டங்ஸ்டன்பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கிறது.மத்திய அமைச்சர் மூலமாக டங்ஸ்டன் சுரங்கத்திற்கு கொடுத்த அனுமதி ஏலம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இந்த முடிவுக்கு அனைவரும் வரவேற்பு தெரிகின்றனர். எந்தெந்த மாநிலங்களில் கனிம வளங்கள் உள்ளது என நாடு முழுவதும் ஜியாலஜிகல் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
டங்ஸ்டன் அரியவகை தாது பொருள். அதை தற்போது வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்து வருகிறோம் தமிழ்நாட்டில் இருப்பதால்தான் தமிழக அரசிடம் பேசி ஏலம் விட தயாரான போது மாநில அரசு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
விவசாயிகளுடன் கலந் து ஆலோசித்தபோதுதான் இங்கிருக்கும் பாதிப்புகள் எங்களுக்கு தெரியவந்தது.
மக்கள் தெரிவித்த கருத்துக்களை அமைச்சர் ஏற்றுக் கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த அரசு இருக்கும். இதற்காக மோடியிடம் பேசி டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தார்
மத்திய அமைச்சர். டங்ஸ்டன் போராட்டத்தை திசை திருப்ப முயன்றும் பொது மக்கள் உறுதியுடன் போராடினர்.
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ததை தொடர்ந்து டெல்லி சென்ற விவசாயிகள் கிஷன் ரெட்டிக்கு அரிட்டாபட்டி வர விவசாயிகள் அழைப்பு விடுத்ததாகவும் அவரும் வருவதாக ஒத்துக் கொண்டுள்ளாதாக தெரிவித்தார்.
இதற்காக பாடுபட்ட அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோருக்கும் எல்லா வற்றிற்கும் காரணமான பிரதமர் மோடிக்கும் நன்றிதெரிவித்தார்.
தமிழக அரசின் நடவடிக்கையால்தான் மோடி அரசு பணிந்து திட்டத்தை ரத்து செய்துவிட்டதுஎன, தமிழக முதல்வர் தெரிவித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு ?
ராம.சீனிவாசன் இந்த விவகாரத்தை நான் அரசியலாக பார்க்கவில்லை ,
அதற்காக அனைத்து கட்சியினருமே போராடி உள்ளனர். ஆனால் இந்த விஷயத்தை அரசியலாக இப்போது பேச விரும்பவில்லை. அதற்காக தனியாக நான் பதில் கூறுகிறேன் என்றார்.
தொடர்ந்து, திட்டத்தை அறிவித்தவர்களே வெற்றியாக கொண்டாடுவது தான் அரசியல் என கனிமொழி எம்பி கூறியது குறித்த கேள்விக்கு
ஆயிரம் பேர் ஆயிரம் பேசியிருக்கலாம் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது போல் நடித்து இருக்கலாம் .ஆனால் உண்மையிலேயே விவசாயிகளுக்காக உடனிருந்து மக்கள்கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தது பிரதமர் மோடி தான்
என தெரிவித்த ராம சீனிவாசன் ,
டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.
வள்ளால பட்டி மகாமுனி டங்ஸ்டன் போராட்ட குழு பேட்டி:
மேலூர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக மக்கள் கவலையோடு இருந்தார்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தது.மதுரை நோக்கி மிகப்பெரிய நடைபயணம் மேற்கொண்டு இருந்தோம்.இந்தப் போராட்டத்தின் விளைவாக மிகப்பெரிய வெற்றி பரிசு கிடைத்திருக்கிறது.எங்கள் கிராமத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை டங்ஸ்டன் திட்டம் கிராமத்திற்கு வராது என உறுதி அளித்தார்.அதை ஏற்றுக் கொண்டு மத்திய அமைச்சர் டெல்லி சென்று அவரிடம் மேலும் விவகாரம் பற்றி தெரிவித்தோம் .
கேட்ட அமைச்சர் தொடர்பாக பிரதமரிடம் பேசிவிட்டு செல்வதாக கூறினார்.
நாங்கள் முடிவு தெரியாமல் இருந்து செல்ல மாட்டோம் என கூறினோம் அதை ஏற்றுக் கொண்டு அடுத்த அடுத்த நாள் டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்யப்பட்ட ஆணையை எங்களிடம் .இத்திட்டத்தை ரத்து செய்தால் பிரதமர் மோடிக்கும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் பாஜக நிர்வாகிகள் அனைவருக்கும் கிராமத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம் ….
ஆனந்த் அம்பலகாரர் டங்ஸ்டன் போராட்ட குழு பேட்டி :
சுரங்கம் தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினோம்.அமைச்சர் மூர்த்தி எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தார்.
அதேபோல், பாஜக தலைவர் அண்ணாமலையும் உறுதி கொடுத்தார்.இந்த போராட்டம் இந்தியாவிற்கு நம்பிக்கை தரக்கூடிய ஒரு போராட்டம், பாஜக தலைவர் சொன்னது போல் டெல்லி சென்றுமத்திய அமைச்சரிடம் பேசி இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளனர். திட்டம் ரத்து செய்யப்பட்டது. மிக்க மகிழ்ச்சி. திட்டத்தை ரத்து செய்த அனைவருக்கும்நன்றி தெரிவிப்பதாக கூறினர்.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ததை தொடர்ந்து தற்செயலாக சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த ஓ.ப. ரவீந்திரநாத் குமார் அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மகாலட்சுமி பெண்கள் எழுச்சி இயக்கம் மேலூர்.
நவம்பர் மாதம் ஏழாம் தேதி ஜங்ஷன் தொடர்பாக தகவல் தெரிந்ததும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டோம் அவர்கள் எனக்கு முழுமையாக தெரியவில்லை என கூறினார்கள் அடுத்தடுத்து டென்ஷன் நிலம் எடுப்பு தொடர்பாக அறிவிப்புகள் வெளியானது அதனைத் தொடர்ந்து விவசாயிகள் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தொடர் போராட்டம் நடத்தினோம் அதில் மேலூர் முதல்மதுரை மத்திய தபால் அலுவலகம் வரை நடைபயண போராட்டம் நடத்தினோம்.
இதனைத் தொடர்ந்து, மக்களின் பல்வேறு அழுத்தங்களுக்கு ஒன்றிய அரசு செவி சாய்த்து போராட்ட குழுவினர் விவசாய பிரதிநிதிகள் அடங்கிய குழு டெல்லி சென்று தற்போது டங்ஸ்டன் திட்டம் ரத்து என அறிவிப்பு வெளியானது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.