எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளையொட்டி மேலும் 1,189 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஜெயில்களில் ஆயுள் தண்டனை கைதிகளில் இந்த ஆண்டு பிப்ரவரி 25-ந்தேதி வரை 10 ஆண்டு நிறைவு செய்தவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். இதில் 60 வயது ஆனவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முதலில் விடுதலை அளிக்கப்பட்டது. இதுவரை தமிழக ஜெயில்களில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த 311 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர், எதிர்வரும் மாதங்களில் 1,189 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி கைதிகளுக்கு விடுதலை: தமிழக அரசு முடிவு
Popular Categories



