ராஜஸ்தானில், பசு வளர்க்கும் விவசாயிகள், பாலை லிட்டருக்கு 22 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். தொடர்ந்து , கிர் மற்றும் தர்பார்கார் போன்ற உயர் ரக பசுக்களை வளர்ப்போர், அதன் கோமியத்தை விற்பனை செய்து வருகின்றனர். அது லிட்டருக்கு 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. உதய்ப்பூரில் உள்ள மஹாராணா பிரதாப் விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகம், இயற்கை விவசாய திட்டத்திற்காக மாதந்தோறும் 300 முதல் 500 லிட்டர் பசு கோமியத்தை வாங்கி வருகிறது. இதற்காக மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்கிறது.
பாலை விட கோமியத்தால் அதிக வருவாய் பெறும் விவசாயிகள்
Popular Categories



